
கோடை காலம் தொடங்கி விட்டது.. வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது...பல இடங்களில் குடிநீருக்காக இப்பவே மக்கள் கொஞ்சம் கஷ்டப்படுகிறார்கள்...
ஆனால் பல இடங்களில்,குடிநீர் வீணடிக்கப்படுகிறது....
அதற்கு உதாரணமாக தற்போது மகுடஞ்சாவடி மெயின்ரோட் பைபாஸில் குடிநீர் எப்படி வீணாக செல்கிறது என்பதை பாருங்கள்..
ஆனால் மகுடஞ்சாவடி மெயின்ரோட் பைபாஸில் மேட்டூர் ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வரும் காவிரி நீர் வீணாக ரோட்டிலும் சாக்கடையிலும் ஓடுகிறது.
எவ்வளவோ அதிகாரிகளிடம் முறையிட்டும் இதற்கு நிரந்தரதீர்வு இல்லை.இதுவரை எத்தனையோ முறை புகார் அளித்தும் யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது.
சாக்கடை தண்ணீரில் வீணாகும் குடிநீரை பார்த்து மக்கள் மிகவும் வேதனை தெரிவித்து உள்ளனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.