பெண்களுக்கு சிறுநீரக பாதிப்பு.. உடலில் காட்டும் 7 அறிகுறிகள் இதோ!!

By Kalai SelviFirst Published Mar 21, 2024, 3:00 PM IST
Highlights

பெண்களுக்கு தோன்றும் சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

பொதுவாகவே, வயதாகும்போது, அதிக உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். அந்தவகையில், 30 வயதிற்குப் பிறகு பெண்களுக்கு சிறுநீரக பிரச்சனை வருவது மிகவும் பொதுவானது. மேலும், சிறுநீரக பிரச்சனை ஏற்படும் போது,   அதன் அறிகுறிகள் உடலில் தோன்றும். 

பெண்களுக்கு சிறுநீரக பாதிப்பு: பெண்களில் சிறுநீரக பாதிப்பு அவர்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். எனவே, சிறுநீரகப் பிரச்சனை ஏற்படும் போது,   அதன் அறிகுறிகளை சரியாக அறிந்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை சுலபமாக தடுக்கலாம்.

பெண்களுக்கு சிறுநீரக பாதிப்புக்கான காரணங்கள் என்ன?
பெண்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமாக உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உயர் இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் அதை சரியாக கையாளவில்லை என்றால், அது சிறுநீரகத்தை சேதப்படுத்தும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கும். அதிக இரத்த குளுக்கோஸ் அளவு சிறுநீரகங்களில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்தும். உடல் பருமன், சிறுநீரக பிரச்சனைகளின் குடும்ப வரலாறு மற்றும் புகைபிடித்தல் ஆகியவை பெண்களுக்கு சிறுநீரக பாதிப்புக்கான ஆபத்து காரணிகள் ஆகும். 

பெண்கள் முகம் மற்றும் கண்களில் அறிகுறிகள்:
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, அதன் அறிகுறிகள் உடலில் தோன்றும். அதுவும், முக்கியமாக முகம் மற்றும் கண்களில் தான் காணப்படும். அத்தகைய அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனே மருத்துவமனைக்கு செல்லுங்கள். இப்போது, பெண்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருந்தால் இந்த 7 அறிகுறிகள் அவர்களின் உடலில் காணப்படும். அது என்னவென்று பார்ப்போம்.

இதையும் படிங்க:  பீர் குடித்தால் சிறுநீரக கல் கரையுமா? ஆய்வுகள் கூறும் உண்மை இதோ..!!

பெண்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள்:

வீங்கிய கண்கள்: சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட பெண்ணுக்கு கண்கள் வீங்கி இருக்கும். காரணம், சிறுநீரகங்கள் உடலில் இருந்து திரவங்களை சரியாக வெளியேற்றத் தவறுவதால் இப்படி  ஏற்படுகிறது. கண் வீக்கம் தொடர்ந்து மற்றும் கடுமையாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிறுநீரக பரிசோதனை செய்துகொள்ளவது நல்லது.

கருவளையம்: கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றினால், இது சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறியாகும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் கழிவுகளின் சமநிலை சீர்குலைந்துவிடும். எனவே, கண்களை சுற்றி கருவளையம் அதிகமாக இருந்தால், உடனே சிறுநீரக பரிசோதனையைச் செய்துகொள்ளுங்கள்.

தோல் நிறமாற்றம்: தோல் மஞ்சள் மற்றும் வெளிர் நிறமாக மாறினால், நீங்கள் உடனடியாக சிறுநீரக பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில், இது சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, உடலில் அசுத்தங்கள் குவிந்து, சருமத்தின் நிறத்தை பாதிக்கிறது. சிறுநீரகத்தின் நிறமும் மாறினால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.

இதையும் படிங்க: சிறுநீரக கற்கள் பிரச்சனையா? அப்ப இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க..பிரச்சினைக்கு குட் பை சொல்லுங்க..!!

தோல் வறட்சி, அரிப்பு: சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் தோல் வறண்டு அரிப்பு ஏற்படும். உடலில் எலக்ட்ரோலைட்டுகள் குறைந்து நீரிழப்பு ஏற்படும் போது இது நிகழ்கிறது. எனவே, தோல் வறண்டு அல்லது மீண்டும் மீண்டும் அரிப்பு ஏற்பட்டால் உங்களுக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

முக வீக்கம்: சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால், அறிகுறிகளில் கன்னம், தாடை, அல்லது முகம் முழுவதும் வீங்கி இருக்கும். எனவே, இந்தமாதிரி இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று சிறுநீரக பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.

கண்கள் சிவத்தல்: கண் சிவப்பு, எரிச்சலூட்டும் கண்கள் சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகளாகும். கண்கள் சிவப்பாக இருந்தால், அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் சீர்குலைவைக் குறிக்கிறது. சிறுநீரக பிரச்சனை காரணமாகவும் இது சாத்தியமாகும். எனவே முறையாக பரிசோதித்து சிகிச்சை பெறவும்.

தோலில் மருக்கள்: சிறுநீரக சேதத்தின் மற்றொரு அறிகுறி மருக்கள் ஆகும். தோலில் மருக்கள் தோன்றினால், சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறியாகும்.

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது கடினமான வேலை அல்ல. உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை சிறுநீரக பிரச்சனைகளுக்கு முக்கிய காரணங்கள். முறையான உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி மூலம் சிறுநீரக பாதிப்பை தவிர்க்கலாம். மேலும், புகைபிடிப்பதை விட்டுவிடவும் மற்றும்  மது அருந்துவதை குறைத்துக் கொள்ளவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!