
ஆளாளுக்கு எக்ஸ்ட்ரா பிஸ்னஸ் செய்து கூடுதல் பணம் பார்க்கும் காலமிது. அதிலும் சிலர் ரசனையாக தங்களுக்கு பிடித்தமான தொழிலை, கூடுதல் பிஸ்னஸாக செய்து பணம் பார்க்கிறார்கள். அந்த வகையில் பறவைகள் வளர்ப்பில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை எகிறி நிற்கிறது. புறாக்கூண்டு சைஸே தனது வீடு இருந்தாலும் அதிலும் புறாவை வைத்து வளர்த்து சம்பாதிப்பவர்கள் அதிகம்தான்.
கவனத்தோடு செய்தால் நல்ல லாபம் கொடுக்கும் இந்த தொழிலில் சில ரிஸ்க்குகளும் உள்ளன. அவற்றில் முக்கியமானது நோய்கள்.
பல்க்காக கோழி வளர்ப்பில் ஈடுபடுவோர் போக, புறா, காடை, லவ்பேர்ட்ஸ் என்று வீட்டிலேயே பறவை வளர்த்து விற்போர் பொதுவாக பறவைகளை தாக்கும் சில நோய்களை தெரிஞ்சுக்குங்க.
அம்மை நோய், வெளிப்புற ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பிரச்னைகள், புல்லோரம் கழிச்சல், காலரா, தொப்புள் அலற்சி போன்றவை அவற்றில் முக்கியமானவை.
இம்மாதிரியான நோய்களால் தாக்கப்பட்ட பறவைகள் இரையெடுக்காது, சோர்ந்து காணப்படும், நீர் மட்டும் அருந்த முனைப்பு காட்டும் ஆனாலும் முடியாது.
இந்த அறிகுறிகளை வைத்து அவற்றை கண்டுபிடித்து, நீரில் கலந்து வாய் வழியாக கொடுக்கப்படும் சொட்டு மருந்துக்களை வழங்கி குணப்படுத்திவிடலாம். கவனிக்காமல் விட்டால் சிக்கல் பெரிதாகலாம். பறவையின் உயிருக்கே ஆபத்தாகலாம். சில நேரங்களில் சில நோய்கள் மற்ற பறவைக்கு பரவும் ரிஸ்க்கும் உண்டு.
எனவே நோய் கண்ட பறவைகள் குறித்து மருத்துவரிடம் பேசி உடனே கேர் எடுத்தீங்கன்னா உயிரையும் காப்பாற்றலாம், காசையும் காப்பாற்றலாம்.
உங்களின் ஒரு நிமிட கவனிப்பே பறவையின் உயிரையும் காப்பாற்றிடும், விழிப்புடன் இருங்கள்!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.