உங்களை குறிவைக்கும் நோய்கள்! விரட்டியடிக்கும் சூரிய ஒளி! இதை செய்தால் மட்டும் போதும்!

By manimegalai aFirst Published Nov 15, 2018, 1:49 PM IST
Highlights

இப்போது அனைவரும் குளிர்சாதன வசதியை எதிர்பார்க்கிறார்கள். வீட்டில் தூங்கும் போது குளிர்சாதன வசதி வேண்டும்.  காரில் செல்லும் போதும் அலுவலகத்தில் இருக்கும் போதும் ஏ.சி இல்லாமல் இருப்பது இல்லை,  மேலும் ஓட்டல்களுக்கு சென்றாலும் ஏ.சி. அறையை தேடி மட்டுமே பலர் செல்கிறார்கள். 

இப்போது அனைவரும் குளிர்சாதன வசதியை எதிர்பார்க்கிறார்கள். வீட்டில் தூங்கும் போது குளிர்சாதன வசதி வேண்டும்.  காரில் செல்லும் போதும் அலுவலகத்தில் இருக்கும் போதும் ஏ.சி இல்லாமல் இருப்பது இல்லை,  மேலும் ஓட்டல்களுக்கு சென்றாலும் ஏ.சி. அறையை தேடி மட்டுமே பலர் செல்கிறார்கள். 

இப்படி சொகுசு வாழ்க்கைக்கு அடிமையாகி குளிர் சாதன வசதியை நோக்கி செல்பவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகிறார்கள். இப்படிப்பட்டர்களுக்கு சூரியனின் ஒளிக்கதிர் அவர்கள் மேல் விழாத நிலை உள்ளது. இப்படிப்பட்டவர்களுக்கு தான் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது.

தாவரங்களுக்கு எவ்வாறு சூரிய ஒளிக்கதிர் தேவைப்படுகிறதோ அதே போன்று தான் மனிதர்களுக்கும் சூரிய ஒளிக்கதிர் தேவையாகிறது. மனிதன் உயிர் வாழவும். உடல் உறுப்புகள் பலமிக்கதாக இருக்கவும் பல்வேறு சத்துக்கள் கிடைத்தாலும் வைட்டமின் டி சத்து என்பது சூரிய ஒளிக்கதிரின் இருந்து மட்டுமே கிடைக்க கூடியது. 

வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவது இயற்க்கை. சூரிய ஒளி உடலில் படவில்லை என்றால் வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படும்.

இதனால் உடலில் எலும்பு, தசை சம்பபந்தமான நோய்கள் தாக்கும். இன்று பலர் இந்த நோய்களால் தாக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அப்போது தான் அவர்களுக்கு சூரிய ஒளி உடலுக்கு தேவை என்பதும் அது கிடைக்காததால் எப்படி நோய் தாக்குகிறது என்பதும் தெரியும்.

காலை வெயிலும் மாலை வெயிலும் உடலுக்கு நல்லது. மதியம் உச்சி வெயில் என்பது உடலுக்கு கெடுதலை தரும். பல்வேறு நோய்களையும் ஏற்படுத்தும். சூரிய ஒளிப்பட வேண்டும் என்பதற்காக மதியம் உச்சி வெயிலில் நடமாட கூடாது. காலை வெளியில் தான் வைட்டமின் டி சத்து கிடைக்க ஏதுவானதாகும். எனவே வைட்டமின் டி சத்து குறைபாடு உடையவர்கள் காலை வெயிலில் காலார நடந்து வர உடலுக்கு தேவையான சத்து கிடைத்துவிடும். சில ஆலயங்களில் சூரிய வழிபாடு கூட நடைபெறுவது உண்டு.

யோகாசனத்தில் கூட சூரிய நமஸ்காரம் என்பது உடற்பயிற்சியின் சூரியனை மையப்பத்தியே உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சூரிய நமஸ்காரம் காலை நேரத்தில் சூரிய உதயத்தில் செய்யும் போது உடல் உறுப்புகள் நன்கு  வேலை செய்யும் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை. 

click me!