விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டமா..? முதலில் இதை தெரிஞ்சிக்கோங்க..!

By ezhil mozhiFirst Published Aug 27, 2019, 4:34 PM IST
Highlights

 கோயம்பேடு சந்தை வளாகத்தில் மலர் அங்காடி அருகில் சிறப்பு சந்தை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் இப்போதே விழாக்கோலம் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதற்காக விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேட்டில் சிறப்பு சந்தை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கோயம்பேடு சந்தை வளாகத்தில் மலர் அங்காடி அருகில் சிறப்பு சந்தை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2ம் தேதி வரை செயல்பட உள்ள இந்த சந்தையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும். அதாவது பொரிகடலை கரும்பு பூசணிக்காய் நாட்டு சக்கரை, மஞ்சள், தோரணங்கள்,மலர்மாலை, எருக்கம் பூ, விநாயகர் சிலைகள் என சொல்லிக்கொண்டே போகலாம்.

இதுகுறித்து விசாரித்த போது தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் மிக மிக குறைவாக மக்கள் வாங்கி செல்ல ஏதுவாக சிறப்பு சந்தை திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்து  உள்ளனர். 

click me!