மேஷம் முதல் கன்னி சூப்பர் ராசிப்பலன் உங்களுக்காக ..!

Published : Aug 27, 2019, 03:20 PM IST
மேஷம் முதல் கன்னி சூப்பர் ராசிப்பலன் உங்களுக்காக ..!

சுருக்கம்

புதிய முடிவுகளை எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை  

மேஷ ராசி நேயர்களே...!

வெளிவட்டாரத்தில் உங்களது அந்தஸ்து உயரும். அதிரடியான சில திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

புதிய முடிவுகளை எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை

மிதுன ராசி நேயர்களே...!

எதிர்மறை விமர்சனங்களை கண்டு பயப்பட வேண்டாம். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது உங்களுக்கு அல்லது.

கடக ராசி நேயர்களே..!

காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். நீண்டகால கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.மற்றவர்களிடம் நயமாக பேசுவது நல்லது.

சிம்ம ராசி நேயர்களே...!

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.

கன்னி ராசி நேயர்களே..!

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவு எப்போதும். அதுபோன்று கலைப்பொருட்கள் வந்து சேரும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

புதிய முயற்சிகள் பல இழுபறிக்குப் பின்னர் முடியும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உடல்நலம் பாதிக்கக்கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு ராசி நேயர்களே...!

கேட்ட இடத்திலிருந்து பண வரவு வரும். சகோதர வகையில் ஒற்றுமை அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் நன்மை உங்களுக்கு கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே..!

உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ கூடிய நாள். பயணங்கள், மேற்கொள்ளவேண்டி வரலாம். உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.

விருச்சிக ராசி நேயர்களே..! 

செய்ய நினைத்த காரியங்களை தங்கு தடையின்றி செய்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளும் நாள் இது.

மீனராசி நேயர்களே..!

கடின உழைப்பால் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Winter Tips : குளிர்காலத்தில் சளி அடிக்கடி வருதா? இந்த உணவுகளை உடனே ஒதுக்கிவிடுங்க
Thyroid Belly : தைராய்டால் வந்த அதிக எடை, 'தொப்பை' அற்புத மூலிகை பானம்! எப்படி தயார் செய்யனும்?