மாயமான ’விக்ரம் லேண்டர்’ கண்டுபிடிப்பு...! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நம்ம தரமணி என்ஜினியர்..! உறுதி செய்த நாசா...!

By ezhil mozhiFirst Published Dec 3, 2019, 11:56 AM IST
Highlights

லேண்டர் தரையிறக்கப்பட்டதா? அல்லது விழுந்து நொறுங்கியதா? என தொடர்ந்து இஸ்ரோ முயற்சி மேற்கொண்டு வந்த இந்த ஒரு தருணத்தில் நாசா ஓர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

மாயமான ’விக்ரம் லேண்டர்’ கண்டுபிடிப்பு...! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நம்ம தரமணி என்ஜினியர்..! உறுதி செய்த நாசா...! 

நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 2 வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் லேண்டர் தரையிறக்க மேற்கொண்ட முயற்சிகள் சற்று பின்வாங்கியது.

இதன்காரணமாக லேண்டர் தரையிறக்கப்பட்டதா? அல்லது விழுந்து நொறுங்கியதா? என தொடர்ந்து இஸ்ரோ முயற்சி மேற்கொண்டு வந்த இந்த ஒரு தருணத்தில் நாசா ஓர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதில் சந்திரயான்-2 மூலம் அனுப்பப்பட்ட லேண்டர் நிலவின் தென்துருவ பக்கத்தில் விழுந்து உள்ளது என தெரிவித்து உள்ளது. விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் பாகத்தை கண்டறிய நாசாவுக்கு உதவியவர் மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருபவர் சுப்பிரமணியன். இவர் நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த நிலவின் புகைப்படங்களை சேகரித்து தொடர்ந்து ஆய்வு செய்து விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டறிந்தார். பின்னர் விக்ரம் லேண்டரின் பாகங்கள் இருப்பதை கணடறிந்த இவர், இது குறித்து நெசவுக்கு மெயில் அனுப்பி உள்ளார் 

விக்ரம் லேண்டர் தொடர்பாக தான் கண்டுபிடித்ததை நாசாவுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார் பொறியாளர் சண்முக சுப்பிரமணியன். சுப்பிரமணியனின் ஆய்வை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.சண்முக சுப்பிரமணியன் கண்டறிந்த உடைந்த பாகங்கள் இருக்கின்ற இடத்தை 'S' என்று நாசா குறிப்பிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

click me!