பார்வையற்றவரின் இந்த சொல் விஜய் காதில் கேட்கிறதா..? "மற்றவர்களுக்கு விஜய் அப்படி... ஆனால் எங்களுக்கு அவர் "ஒரு வசனம்"...!

thenmozhi g   | Asianet News
Published : Dec 11, 2019, 06:10 PM IST
பார்வையற்றவரின் இந்த சொல் விஜய் காதில் கேட்கிறதா..? "மற்றவர்களுக்கு விஜய் அப்படி... ஆனால் எங்களுக்கு அவர் "ஒரு வசனம்"...!

சுருக்கம்

பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சரவணன் மணிகண்டன் என்பவர் தெரிவிக்கும் போது, "விஜய்க்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் அவருடைய ஆடை, முகபாவனை, நடிப்புத் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ரசிகர்களாக இருக்கின்றனர்.

பார்வையற்றவரின் இந்த சொல் விஜய் காதில் கேட்கிறதா..? "மற்றவர்களுக்கு விஜய் அப்படி... ஆனால் எங்களுக்கு அவர் "ஒரு வசனம்"...! 

நடிகர் விஜய் தற்போது தன்னுடைய 64 ஆவது படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பூவிருந்தவல்லியில் உள்ள பார்வையற்றவர்களுக்கான பள்ளியில் நடைபெற்றது.

அப்போது நடிகர் விஜய் தங்களை வந்து சந்திப்பார் என மிகவும் ஆவலாக காத்திருந்த மாணவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக, முன்னதாகவே ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பி உள்ளார் விஜய். இதுகுறித்து அவர் கிளம்பிய அரை மணி நேரத்திற்கு பின்பே பார்வையற்ற மாணவர்களுக்கு தெரியவர அவர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சரவணன் மணிகண்டன் என்பவர் தெரிவிக்கும் போது, "விஜய்க்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் அவருடைய ஆடை, முகபாவனை, நடிப்புத் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ரசிகர்களாக இருக்கின்றனர்.

ஆனால் எங்களுக்கு அவருடைய வசனங்கள் மூலமாகவே ஒரு ரசிகராக நாங்கள் இருக்கிறோம். இந்த ஒரு நிலையில் வேறு எந்த ஒரு படத்திற்கும் கூட இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து இருந்தோம். இந்த நிலையில் எப்படியும் அவர்கள் அனுமதி பெற்று  விட்டனர். 

இங்கு படப்பிடிப்பு நடந்த இந்த மூன்று நாட்களில் எங்களால் வெளியில் செல்லவும் முடியவில்லை.. உள்ளே வரவும்  முடியவில்லை. அந்த அளவுக்கு கெடுபிடி நிலவியது. இதற்கிடையில் எங்கள் மாணவர்களை அவர் நேரில் வந்து சந்திப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவர் கிளம்பிய பிறகு அரை மணி நேரம் காத்திருந்து பெரும் ஏமாற்றம் மட்டுமே அடைந்தனர். 

இது போன்று யாரும் இருக்கக்கூடாது. இப்படிப்பட்ட நிகழ்வும் மீண்டும் நடக்க கூடாது என தெரிவித்து உள்ளார். இதனை அடுத்து மாணவர்களை சந்திக்க உள்ளார் என்று செய்தி விஜய்க்கு சரிவர தெரியப்படுத்தவில்லை என மேனேஜர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு செய்தி தற்போது காட்டு தீ போல் வைரலாக பரவி வருகிறது. மேலும் நடிகர் விஜய்க்கு இதெல்லாம் தெரிய படுத்த வேண்டுமா? அவருக்கே தோன்றாதா? பார்வையற்ற மாணவர்கள் இருக்கும் ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடக்கும் போது அவர்களை சந்தித்து சில வார்த்தைகள் கூடவா அவர் பேச மாட்டார்? என பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்