இதுவல்லவோ தாய்மை... விளையாட்டுக்கு நடுவிலும் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய வீராங்கனை... வைரலாகும் புகைப்படம்..!

By vinoth kumarFirst Published Dec 11, 2019, 6:03 PM IST
Highlights

மிசோரமில் வாலிபால் விளையாட்டு போட்டியின் இடைவேளையில் வீராங்கனை ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மிசோரமில் வாலிபால் விளையாட்டு போட்டியின் இடைவேளையில் வீராங்கனை ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இன்றைய நவீன உலகத்தில் அழகு குறைந்துவிடும் என்று சில பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்பால் மறுத்து வருகின்றனர். ஆனால், பத்து மாதம் தாயின் கருவறையில் இருந்து பிறந்த குழந்தை முதலில் சுவைப்பது அன்னையின் தாய்ப்பால். இது தான் குழந்தையின் முதல் உணவு. குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. அனைத்து சத்துகளும் தாய்ப்பாலில் இயற்கையாகவே அமைந்துள்ளன. 

இந்நிலையில், மிசோரம் மாநிலம்  துய்கும் என்ற வாலிபால் அணியை சேர்ந்த வீராங்கனை லால்வென்ட்லுயாங்கி என்பவர் மிசோரம் மாநில அளவிலான வாலிபால் தொடர் போட்டியில் பங்கேற்றுள்ளார். அபாரமாக ஆடி அணி வெற்றிக்கு உதவுவது ஒரு பக்கம் என்றால், அவ்வப்போது இடைவேளையில் ஓடி வந்து தனது 7 மாத கைக்குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டவும் அவர் மறப்பதில்லை.

குழந்தைக்கு பசியாற்ற வேறு வழிகள் இருந்தபோதிலும், தாய்ப்பால் புகட்டுவதை தவிர்க்கவில்லை. அவரது தாய்மை குணம் புகைப்படமாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் இந்த வீராங்கனையை பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும்,  மிசோரம் மாநில அமைச்சர் ராபர்ட் ரோமாவியா, அந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘லால்வென்ட் லுயாங்கிக்கு சல்யூட்’ என்று பதிவிட்டுள்ளார்.

click me!