நல்ல வேளை மக்கள் இப்ப வீட்ல இருக்காங்க... 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் இப்படி தான் இருக்குமாம்!

By ezhil mozhiFirst Published Apr 15, 2020, 2:11 PM IST
Highlights
நிலைமை இப்படி இருக்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பத்தின் காரணமாக பொதுமக்கள் யாரும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நல்ல வேளை மக்கள் இப்ப வீட்ல இருக்காங்க... 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் இப்படி தான்  இருக்குமாம்!

கொரோனா என்ற ஒரு பிரச்சனை இல்லை என்றால் தற்போது வெயில் மழை பாராது மக்கள் எப்படி மிக வேகமாக இயங்கி வந்தார்களோ அதே போன்று தான் தற்போதும் இருந்து இருக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது ஆனால், தற்போது இதற்கெல்லாம் மாற்றாக கொரோனா எதிரொலியால் மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் முடங்கி இடுகின்றனர் 

அதே வேளையில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெப்பத்தின் தாக்கமும் ஒருபக்கம் அதிகரித்து உள்ளது. இந்த ஒரு தருணத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. நிலைமை இப்படி இருக்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பத்தின் காரணமாக பொதுமக்கள் யாரும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதற்கு முன்னதாக மற்ற மாவட்டங்களில் பதிவாகும் இயல்பான வெப்ப நிலையைவிட பல்வேறு மாவட்டத்தில் 100 முதல் 102 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகி உள்ளது. இதன் காரணமாக மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட காலை 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெப்பத்தின் தாக்கம் தாங்க மாட்டார்கள் என்பதால் அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் இது குறிப்பிட்ட நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


கொரோனா பிரச்சனை ஏற்பட்டுள்ள இந்த நேரம் கோடை காலம் என்பதால் வீட்டில் இருந்தே வேலை  செய்பவர்களுக்கு ஏதுவான ஒரு காலமாக அமைந்துள்ளது. அதே வேளையில் கொரோனா பாதிப்பு கருத்தில் கொண்டு அத்தியாவசிய தேவைகளை தாண்டி எதற்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல கூடாது என்பதை  புரிந்துகொண்டு, அரசு எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
 
click me!