ரேஷன் அட்டைகளை சரிபார்க்கும் நேரமா இது..? ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி உத்தரவு..!

By ezhil mozhiFirst Published Apr 15, 2020, 12:47 PM IST
Highlights
பொது விநியோக முறைப்படி, அத்தியாவசியப் பொருட்களை 16 ஆம் தேதி முதல் மக்கள்  பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதற்காகன அதிக எண்ணிக்கையிலான கவுண்டர்களை நியாயமான விலை கடைகளில் அமைப்பதாக தெரிவித்து உள்ளார்.
ரேஷன் அட்டைகளை சரிபார்க்கும் நேரமா இது..? ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி உத்தரவு..! 

கொரோனா எதிரொலியால் நாடே ஊரடங்கு உத்தரவில் உள்ள போது அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு விநியோகிப்பதற்கான அடுத்த கட்ட சிறப்பு முயற்சியை எடுத்து உள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி 

பொது விநியோக முறைப்படி, அத்தியாவசியப் பொருட்களை 16 ஆம் தேதி முதல் மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதற்காகன அதிக எண்ணிக்கையிலான கவுண்டர்களை நியாயமான விலை கடைகளில் அமைப்பதாக தெரிவித்து உள்ளார்.

சிறப்பு டோக்கன்

சமூகவிலைகளை கடைப்பிடிக்க முன்னதாகவே "பயனாளிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்படும்  என்றும் அதில் வழங்கும் நேரம் குறிப்பிடப்படும்" என்றும் தெரிவித்து உள்ளார் 

அவ்வாறு பொருட்களை வாங்கும் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேறு பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜெகன் மோகன் ரெட்டி, சிவில் சப்ளைஸ் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் மேற்கொண்ட ஒரு வீடியோ கான்பரன்ஸில் தெரிவித்து உள்ளார் 


புதிய அட்டை வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் கிராம மற்றும் வார்டு செயலகங்களில் கிடைக்கும் படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும் அனைத்து ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ₹ 1,000  விநியோகிக்குமாறும் உத்தரவு  பிறப்பித்து உள்ளார். இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பயனாளிகளின் ரேஷன் அட்டைகளை சரிபார்த்து  வழங்குதல் வேண்டாம். யாரும் பசியோடு இருக்க கூடாது. பயனாளிகள் பழைய ரேஷன் கார்டுகளை வைத்திருந்தாலும் அவர்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வழங்குதல் வேண்டும் என தெரிவித்து உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.


ஜெகன் ஆந்திர முதல்வராக பதவி ஏற்ற காலம் முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இவருடைய ஒவ்வொரு முடிவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. 
 
click me!