சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, அது சரியாக இருந்தால் மட்டுமே சாப்பிட பயன்படும். இது அறிவியல் என்றாலும், இதுதொடர்பாக வேத நூல்களிலும் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன்படி மாவு அரைப்பது பொருளாதாரத்துக்கு வளர்ச்சியை தரும் என்று வேத நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சப்பாத்தி அல்லது ரொட்டியை சாப்பிட வேண்டும் என்று விரும்பும் பலர் உள்ளனர். நேரத்தை மிச்சப்படுத்த விரும்புபவர் மற்றும் வேலை காரணமாக அவசர கதியில் இருப்பவர்களுக்கு சப்பாத்தி ஒரு வரப்பிரசாதம் தான். தங்களுக்கு இருக்கும் வேலைபளூவை கணித்து, முன்னரே சப்பாத்திக்கான மாவை பிசைந்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவார்கள். இது இன்றையக் கால நடைமுறை. வேத நூல்களில் சப்பாத்தி சாப்பிடுவதற்கும் மாவு பிசைவதற்கான பக்குவம் குறித்து சில கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. அதன்படி முன்கூட்டியே மாவு பிசைந்து வைக்கும் பழக்கத்தை வேத நூல்கள் ஏற்கவில்லை. இப்படி செய்வதால் எதிர்மறையான ஆற்றல் ஏற்பட்டு, அதனால் தோஷம் ஏற்படுகிறது என்று வேதநூல் குறிப்பிடுகிறது. இதுதொடர்பாக விந்து சாஸ்திரத்தில் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அதுகுறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
தேவைக்கேற்ப மட்டுமே மாவு பயன்படுத்த வேண்டும்
undefined
வசதியை பொறுத்து பலரும் தேவைக்கு அதிகமாக மாவை கலக்கிவிடுகின்றனர். அது சாஸ்திரப்படி தவறாகும். . தேவைக்கு அதிகமாக மாவு கலந்து அந்த மாவை வீட்டில் வைத்திருப்பது எதிர்மறை சக்தியை அதிகரிக்கிறது. மேலும் மாவை சமைப்பதற்கு சற்று முன் பிசைய வேண்டும். சமைப்பதற்கு ஒருநாள் முன்பாகவே மாவு பிசைந்து இருப்பில் வைத்தாலும், அது எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும் என்று வேதம் கூறுகிறது. சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஏற்கனவே பிசைந்து வைத்த மாவை பல மணிநேரம் கழித்து சமைப்பது ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல என்று மருத்துவர்களும் கூறுகின்றனர்.
பிசைந்து வைத்த மாவை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது
எப்போதும் பிசைந்து வைத்த மாவை, சிறிது நேரம் ஊறிய பிறகு தான் சப்பாத்தியாக திரட்டுவார்கள். அதில் எந்த பிரச்னையுமில்லை. ஆனால் மீதமுள்ள மாவை ஃப்ரிட்ஜில் வைத்து, இன்னொரு நாட்களில் சமைத்துக்கொள்வார்கள் அல்லது ஃப்ரீசரில் வைத்து உறையவைத்துவிடுவார்கள். இந்த இரண்டு செயல்பாடுகளுமே தவறு என்று வேதம் சொல்கிறது. இப்படி செய்வதால் வீட்டில் வறுமை ஏற்படும் என்றும், தொடர்ந்து அந்த குடும்பம் கஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
எப்போதும் கைகளால் தான் மாவு பிசைந்திட வேண்டும்
மாவை பிசைவதற்கு கைகளை தவிர, வேறு எந்த பொருளையும் பயன்படுத்துவது முறையல்ல என்று வேதம் கூறுகிறது. வீட்டின் மகள்கள் அல்லது மருமகளின் கைகள் மாவில் வைக்கப்பட வேண்டும். ஏனெனில் வீட்டின் லட்சுமியின் கைரேகை அதாவது மகள் அல்லது மருமகளின் கைரேகை மாவில் பட்டால் வீட்டில் பணத் தட்டுப்பாடு இருக்காது என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிசைந்த பின் மாவை மூடி வைக்க வேண்டும்
சப்பாத்தி மாவை பிசைந்த பின் திறந்து வைக்கக்கூடாது. அதை மூடி மறைக்க வேண்டும். திறந்திருந்தால், தூசி மற்றும் பூச்சிகள் அங்கு விழும் வாய்ப்பு உள்ளது. மாவை மூடியவுடன் பாதுகாப்பாக இருக்கும். சாஸ்திரங்களின்படி, மாவை மூடி வைப்பது குடும்ப உறுப்பினர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கிறது. அவர்களின் கண்ணியத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
சாமுத்திரிகா சாஸ்திரம் : இந்த அடையாளத்துடன் இருக்கும் பெண்களை மணந்துகொண்டால் அதிர்ஷ்டம் தான்..!!
மாவை பிசையும் போது கவனிக்க வேண்டியவை
மாவை பிசையும் போது எப்போதும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் எடுக்கவும். கடவுளுக்கு வழங்கப்படும் உணவு எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். செம்பு ஒரு புனித உலோகமாக கருதப்படுகிறது. எனவே மாவை பிசையும் போது எப்போதும் செம்பு பாத்திரத்தில் எடுத்த நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது ஆரோக்கியத்திற்கும் நல்லது. தாமிரத்தில் உள்ள தண்ணீரைக் குடிப்பதால் பல வியாதிகள் குணமாகும். செம்பு உலோகத்துக்கு ஒவ்வாமை கொண்டவர்கள் மண் பாத்திரங்களை பயன்படுத்தலாம்.
மாவு கலந்த பிறகு மீதமுள்ள தண்ணீரை என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
ஒரு பாத்திரத்தில் மாவு மற்றும் மற்றொரு குவளையில் தண்ணீர் எடுத்து, மாவில் தண்ணீர் சேர்த்து கலக்க ஆரம்பிக்கவும். போதுமான தண்ணீர் ஊற்றிய பிறகு, மீதமானதை கொட்டிவிடக்கூடாது. அதற்கு பதிலாகம் அதைச் செடியின் மீது ஊற்றலாம். சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால் மட்டுமல்ல சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் இது ஒரு நல்ல நடைமுறையாகும்.