ஆஹா என்ன சுவை ....வத்த குழம்பு செய்யலாம் வாங்க........

 
Published : Feb 17, 2017, 06:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
ஆஹா என்ன  சுவை ....வத்த குழம்பு  செய்யலாம்  வாங்க........

சுருக்கம்

வத்த குழம்பு செய்வது எப்படி ...?

வத்த குழம்பு என்றதுமே அனைவரது வாயிலும் எச்சில் ஊறும். அந்த  அளவுக்கு அனைவருக்குமே  ரொம்ப பிடிக்கும். எப்பொழுதுமே  ருசித்து  சாப்பிட  விரும்புபவர்கள்  வத்த குழம்பை  மிகவும்  பிரியத்தோடு  எடுத்துக்கொள்வார்கள் .

தேவையான பொருட்கள்:

சுண்டக்காய்:   1 கப்

வெந்தயம் - 2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

மல்லி - 2 டேபிள் ஸ்பூன்

மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

வரமிளகாய் – 4

புளி - 75 கிராம் (சாறு எடுத்துக் கொள்ளவும்)

சின்ன வெங்காயம் – 10

வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்

அரிசி - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - தேவையான அளவு தாளிப்பதற்கு...

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.

அடுத்து, அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு, அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், ஸ்ரீரங்கம் வத்த குழம்பு ரெடி

உடனே போய்  சாப்பிடுங்க........

   

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Alcohol and Food : மது குடிக்குறப்ப இந்த 'சைட் டிஷ்' மட்டும் எடுத்துக்காதீங்க! மதுவை விட மோசமான விளைவுகள் கொண்டு வரும்
Foods For Men's Health: ஆண்களே! 30 வயசுக்கு மேல 'கட்டாயம்' இந்த உணவுகளை சாப்பிடுங்க! ஆரோக்கியமா வாழ இதுதான் வழி