நகங்கள் உடையாதபடி, நீண்டு வளர வேண்டுமா ? இதை செய்யுங்க .....

 
Published : Feb 15, 2017, 03:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
நகங்கள் உடையாதபடி, நீண்டு வளர வேண்டுமா ?  இதை  செய்யுங்க .....

சுருக்கம்

நகங்கள்  உடையாமல்  இருக்க  வேண்டுமா ? 

நீளமான நகங்களில் அழகாக ஷேப் செய்து நெயில் பாலிஷ் அடித்துக் கொண்டால் நமது அழகுணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவே இருக்கும்.

நம்மிடம் பேசுவதற்கு எல்லாரும் விருப்பமுடையவர்களாக இருப்பார்கள். இதற்காகவே நகத்தை வளர்க்கும்போது, பாதியில் உடைந்து போய்விடும். மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கனும்.

ஏதாவது சின்ன வேலை செய்தாலே உடைந்து போய்விடும்படி சிலருக்கு நகங்கள் இருக்கும். இதற்கு காரணம், சரியான ஊட்டம் இல்லாததுதான். இன்னும் சிலருக்கு நகங்கள் கடினத்தன்மையுடன் இருக்கும்.

நகங்கள் உடையாதபடி, நீண்டு வளர சில  எளிமையான டிப்ஸ் இருக்கு .... 

தினமும் நகங்களுக்கு பாதாம் எண்ணெயை  இரவில் தூங்கப்போகுமுன் தடவி வாருங்கள். நகங்கள் ஊட்டம் பெறும்.

உங்களுக்கு கடினமான நகங்கள் இருந்தால்,  ஆலிவ் எண்ணெயை நகங்களில் தடவி நீவி விட்டால் மென்மையாக மாறிவிடும்.

கால்   விரல்களில்  சிலருக்கு சொத்தை எற்படும். கைகளில் கூட   உண்டாகும். இதற்கு சிறந்த தீர்வு ரோஸ் வாட்டரை நகங்களுக்கு தடவி வாருங்கள். சொத்தை நகம் கீழே விழுந்து, புதிய நகம் முளைக்கும்.

இது தவிர நகங்கல் உடையாமலிருக்க கீழே சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயன்படுத்துங்கள்.

தேவையானவை :

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் எண்ணெய் – அரை டீஸ்பூன்
லாவெண்டர் போன்ற ஏதாவது வாசனை
எண்ணெய் – சில துளிகள்

பாதம் எண்ணெயை சூடுபடுத்தி, அதில் எலுமிச்சை சாறை விடவும். பின் வாசனை எண்ணெயை கலந்து ஒரு பஞ்சினால் நகத்தில் தேய்க்கவும். வாரம் 3 நாட்கள் இப்படி செய்யுங்கள். நகங்கள் உடையாது. பலம் பெறும். வேகமாகவும் வளரும்.

உங்கள் நகங்கள் ஆரோக்கியத்தின் குறியீடு. நகத்தின் ஓரங்களில் ஏதாவது தொற்று ஏற்பட்டால் கூட அது ரத்த நாளங்களை எளிதில் சென்றடையும்.

ஆகவே அடிக்கடி நெயில் பாலிஷ் போடாமல் நகத்தின் இடுக்களை சுவாசிக்க விடுங்கள். இயற்கையான மருதாணியை அரைத்து போடுவதால் நகங்களில் உண்டாகும் பாதிப்புகள் மறைந்துவிடும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்