Vastu tips: வீட்டில் மகிழ்ச்சி, அமைதி, செல்வம் செழிக்க....இந்த வாஸ்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்கோ...

Anija Kannan   | Asianet News
Published : Feb 04, 2022, 07:22 AM ISTUpdated : Feb 04, 2022, 08:28 AM IST
Vastu tips: வீட்டில் மகிழ்ச்சி, அமைதி, செல்வம் செழிக்க....இந்த வாஸ்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்கோ...

சுருக்கம்

வீட்டில் மகிழ்ச்சி, அமைதி, செல்வம் செழிக்க மனச்சோர்வு, நோய் நொடியின்றி  ஆரோக்கியமாக வாழ்வதற்கு சில வாஸ்து முறைகளைப் பின்பற்றலாம் என நம்பப்படுகிறது.

 நமது முன்னோர்கள் வழி வழியாக, எல்லா செயல்களுக்கும் குறிப்பிட்ட சில வாஸ்து, சாஸ்திரம் பின்பற்றி வந்தனர். நாளடைவில் அது மருவி பல்வேறு விதமாக கடைப்பிடப்படுகிறது. இன்றைய சூழலில் வீட்டில் சிறிது பிரச்சனை ஏற்பட்டாலும் அடுத்து என்ன செய்வது? என்பதை அறிய பெரும்பாலான மக்கள் தற்போது ஜோதிடத்தை  தான் நம்பியுள்ளனர். அதன்படி, சில வாஸ்து, சாஸ்திரங்களை பின்பற்றினால் எல்லாம் சரியாகி விடும் என்பது நம்பிக்கை.

அதுமட்டுமின்றி, வீட்டில் மகிழ்ச்சி, அமைதி, செல்லம் செழிக்க மனச்சோர்வு, நோய் நொடியின்றி  ஆரோக்கியமாக வாழ்வதற்கு சில வாஸ்து முறைகளைப் பின்பற்றலாம் என நம்பப்படுகிறது. இவை, வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகளை வெளியேற்றிவிட்டு நேர்மறை ஆற்றலை நாம் பெற முடியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

இந்நிலையில் என்னென்ன வாஸ்து முறைகளை நம் வீடுகளில் தினமும் பின்பற்ற வேண்டும் என்பதை நாமும் இங்கே அறிந்துகொள்வோம்.

கல் உப்பு,  எலுமிச்சை பழத்தின் மகத்துவம்:

வாஸ்து முறைப்படி உங்களது வீடுகளில் உள்ள எதிர்மறை சக்திகள் இல்லாமல் இருப்பதற்கு பெரும்பாலான வீடுகளில் கல் உப்பைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு உப்பை எடுத்து  வீட்டின் ஒவ்வொரு மூலைகளிலும் வைத்துக்கொள்ளும் போது ஒரு வகையாக பாசிட்டிவ் எனர்ஜியை நாம் பெற முடியும். இதேப்போன்று ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரம்பி ஒரு எலுமிச்சை பழத்தைப்போட்டு வைக்கவும். இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை அழித்து நேர்மறை ஆற்றலைப்  பெறுவதற்கு உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

சுத்தம், சுகாதாரம் அவசியம்:

நாம் வசிக்கும் வீடுகளை முதலில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டின் உள்புறம் மற்றும் வாசலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் உங்கள் வீடு மற்றும் மனதில் உள்ள நெகடிவ் எனர்ஜி வௌியேறுவதோடு பாசிடிவ் எனர்ஜியை நீங்கள் பெற முடியும். மேலும் தினமும் காலை மற்றும் மாலையில் அழகான கோலங்கள் இட்டு லட்சுமி தேவியை வரவேற்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களது வீடுகளில் எப்போது நேர்மறை எண்ணங்கள் தோன்றும்.

வீடுகளில் விளக்கு ஏற்வது:

வீடுகளில் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் வீடுகளில் விளக்கு ஏற்றும் போது ஒரு புதுவிதமாக எனர்ஜியையும், மன நிம்மதியையும் நாம் பெறலாம். இதோடு வீடு முழுவதும் மங்களகரமாக இருப்பதால் நெகடிவ் எனர்ஜியை ஒரு போதும் நாம் நினைக்க மாட்டோம். எப்போது பாசிடிவ் வைப்ரேசனை நம்மால் பெற முடியும். எனவே முடிந்தவரை விளக்கு, மெழுகுவர்த்தி போன்றவற்றை ஏற்றி வைக்கவேண்டும் என நம்பப்படுகிறது.

கல்வி வளர்க்கும் அறை:

வாஸ்து முறைப்படி குழந்தைகள் படிக்கும் அறையானது ஒரு வீட்டில் வடகிழக்குப்பகுதியில் அமைந்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஏனென்றால் காற்றும் சூரிய வெளிச்சமும் ஒரு வீட்டில் வடகிழக்கு திசையில் தான் அதிகம் இருக்கும். எனவே அப்பகுதியில் அறையை அமைப்பதோடு ஜன்னலும் வைத்திருப்பது அவசியம். குறிப்பாக குழந்தைக்கு பூமியின் சகல ஜஸ்வரியங்களும் பெற வேண்டும்  என்றால் சூரிய ஒளிக்கதிர்கள் வீட்டினுள் வரவேண்டும். எனவே வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் படிக்கும் அறையை அமைத்துவிடலாம்.

கண்ணாடி:

ஒவ்வொருவரின் வீடுகளின் முன்புறமும் கண்ணாடியை மாற்றி வைப்பது நல்லது. இது எதிர்மறை ஆற்றல வெளியேற்ற உதவியாக  இருக்கும். மேலும் வீட்டினுள் காற்றில் அசையும் மணிகளை கட்டி வைக்கலாம். காற்றில் மெதுவாக அசையும் மணி சத்தத்தின் ஓசை உங்கள் மனதை இனிமையாக்கும். பொதுவாக இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எனவே  இதுபோன்ற மணியோசை உங்களது புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். இதோடு தினமும் வீடுகளில் மணம் தரும் பத்தி போன்றவற்றை ஏற்றும் போது மன நிறைவாக இருக்கும் என நம்பப்படுகிறது.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Uric Acid : யூரிக் அமில பிரச்சினை இருந்தா இந்த '4' பருப்பு வகைகளை சாப்பிடாதீங்க! நிலைமை மோசமாகிடும்
Leadership Skills: உலகையே வழிநடத்தும் 5 ரகசியங்கள்! இனி நீங்கதான் எல்லோருக்கும் Boss!