Valentine's Day Special gift: உங்கள் காதல் கைகூட....இந்த மாதிரி கிப்ட் கொடுத்து அசத்துங்க..!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 05, 2022, 09:30 AM ISTUpdated : Feb 05, 2022, 09:32 AM IST
Valentine's Day Special gift: உங்கள் காதல் கைகூட....இந்த மாதிரி கிப்ட் கொடுத்து அசத்துங்க..!!

சுருக்கம்

காதலர் தினம் நெருங்கிக் கொண்டிருப்பதால், உங்கள் காதலருக்கு என்ன கிப்ட் கொடுத்து அசத்துவது   என்ற குழப்பம் உள்ளதா, அப்படினா கீழே உள்ள தகவல்கள் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். 

காதலர் தினம் நெருங்கிக் கொண்டிருப்பதால், உங்கள் காதலருக்கு என்ன கிப்ட் கொடுத்து அசத்துவது  என்ற குழப்பம் உள்ளதா, அப்படினா கீழே உள்ள தகவல்கள் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். 

பழைய கிப்ட் முறைகள்  கேக், சாக்லேட், ரோஸ் போன்றவை எல்லாம், மலையேறி விட்டது. இன்றைய நவீன கால மாற்றத்திற்கு ஏற்ற வகையில் கிப்ட் கொடுத்து அசத்துங்கள்.அதேசமயம், கொஞ்சம் புதுமையாகவும், பயனுள்ளதாகவும் இந்த கிப்ட்கள் இருக்கும்.

உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 14 ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களின் காதலர்கள், தங்கள் காதலை வெளிப்படுத்த சிறந்த நாளாக கருதுவர். இந்த நாளில், ஆண், பெண் இருவருமே தனது லவ்வருக்கு மனம் கவரும் வகையில் ஒரு கிப்ட் வழங்கி அசத்த வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும். 

மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப காதலன் அல்லது காதலிக்கு பயனுள்ள வகையில் ஏதேனும் ஒரு கிப்ட் வழங்கினால் உங்கள் மீது நல்ல பிம்பத்தை உருவாக்கும். அந்த வகையில், புதுமையாக என்ன கிப்ட் வாங்கலாம் என்பது குறித்து உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். இதை வாங்குவதா, அதை வாங்குவதா என்ற தடுமாற்றம் ஏற்படக்கூடும். கவலையை விடுங்கள், நீங்கள் சரியான கிப்ட் வாங்கி உங்கள் மனம் கவர்ந்தவரை உள்ளம் உருக வைப்பதற்கான சில டிப்ஸ் உள்ளது.

குரூமிங் கிட்ஸ்: 

குரூமிங் கிட்ஸ் எனப்படுபவை ஆண்களுக்கு தேவையான சேவிங் செட், ஸ்பிரே, பெர்ஃப்யூம், க்ரீம், போன்றவைகள் சேர்ந்தவையாகும். பெரும்பாலான ஆண்கள் வேலைக்கு செல்பவர்கள் இம்மாதிரியான விஷயங்களை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அவர்களுக்கு இவை மிகவும் பிடித்தமாக இருக்கும். நீங்கள் இதை வாங்கி கொடுக்கும் பொழுது நிச்சயம் மிகவும் விரும்பி ஏற்றுக் கொள்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவை யாவும் மிகவும் உபயோகமாகவும் தினமும் பயன்படுத்துகிற பொழுது உங்களுடைய காதலருக்கோ காதல் கணவருக்கோ உங்களின் அன்பை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்ற பரிசுப் பொருள்கள்.  

ஸ்பீக்கர்: 

காதலில் மூழ்கி இருக்கும் எவரும் இசைக்கு அடிமையாகாமல் இருக்க முடியாது. ஆகவே, ஒரு வாட்டர் ப்ரூஃப் ஸ்பீக்கர் ஒன்றை வாங்கி நீங்கள் பரிசளித்தால் அதை விடவும் சிறந்த பரிசு வேறு எதுவும் இருக்க முடியாது. அமைதியான சூழலில் அந்த ஸ்பீக்கரில் பாட்டு கேட்கும் ஒவ்வொரு நொடியும் உங்கள் நினைவலைகள் அவரது மனதை நிரப்பி வைத்திருக்கும். அதிலும் போகுமிடமெல்லாம் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் போர்ட்டபிள் ஸ்பீக்கர்ஸ் நல்ல பிராண்டில் வாங்கிக் கொடுத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவர்.

புத்தகங்கள்: 

உங்கள் பார்ட்னர் ஒரு புத்தகப் பிரியர் என்றால் யோசனையே இல்லாமல் கட்டாயம் ஒரு புத்தகத்தை வாங்கி கொடுத்து விடுங்கள். நிச்சயமாக இதற்கு அவர் நன்றி தெரிவிப்பதுடன், ஆழ்மனதில் இருந்து அன்பை வெளிப்படுத்த கூடும். அறை முழுவதும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நிரம்பி இருந்தாலும் புத்தகப் பிரியர் ஒருவருக்கு எப்போதுமே மனநிறைவு ஏற்பட்டுவிடாது. ஆகவே, அவர்களிடம் ஏற்கனவே புத்தகங்கள் இருக்கிறது என்பது குறித்து கவலைப்படாமல் நீங்கள் கட்டாயம் புதிய புத்தகம் ஒன்றை வாங்கி கொடுக்கலாம்.

காற்றை தூய்மையாக்கும் செடிகள்: 

பெரிய அளவுக்கு மரம் வைத்து வளர்க்க முடியாத இன்றைய சூழலில் சின்னஞ்சிறு செடிகளை வைத்து வளர்ப்பதற்கு எல்லோருக்கும் ஆர்வமும், கொஞ்சம் நேரமும் இருக்கும். அதிலும், காற்றை தூய்மையாக்கும் சில வகை செடிகளை வாங்கி நீங்கள் பரிசளிக்கும் போது அது அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கும்.

ரொமான்டிக் கப்: 

ரொமான்டிக் கப்பை பரிசாக கொடுத்தல், தினமும் காலை அதில் காபி குடிக்கையில் உங்கள் ஞாபாகம் வரும்; நீங்கள் இருவரும் ஒன்றாக செலவிட்ட நேரங்கள் ஞாபாகத்திற்கு வரும். இவ்வகை கப் கவர்ச்சியுடன் விளங்கும். உங்களுக்கு பிடித்த டிசைனை தேர்வு செய்யலாம்; உதாரணத்திற்கு மணல் டிசைனில் இதயங்கள், கற்கள் அடங்கிய டிசைனில் இதயங்கள் அல்லது இதழ்கள் டிசைனில் இதயம் அல்லது உங்கள் காதலருக்கு பிடித்த டிசைன்.

ஸ்மார்ட் வாட்ச்: 

கட்டுக்கோப்பான உடலை மெயின்டைன் செய்ய வேண்டும் என்பதில் உங்கள் பார்ட்னர் மிகுந்த ஆர்வம் உள்ளவர் என்றால், நிச்சயமாக அவருக்கு மிகச்சரியான பரிசாக ஸ்மார்ட் வாட்ச் இருக்கும் என்றே கூறலாம். ஒரு நாளில் பெரும்பாலான பகுதியை உங்கள் பார்ட்னர் ஜிம்மில் செலவிடுகிறார் என்றாலும் அல்லது ஜிம் தான் உனக்கு முதல் லவ்வர் என்று நீங்கள் கிண்டல் செய்பவராக இருந்தாலும் இந்த கிப்ட் நிச்சயமாக பொருத்தமானதாக இருக்கும். இதுமட்டுமல்லாமல் புரோட்டீன் ஷேக் பாட்டில்கள், பிட்னஸ் பேண்ட் போன்றவற்றையும் நீங்கள் பரிசளிக்கலாம்.

மேலே சொன்ன கிப்டுகளை உங்கள் மனம் கவர்ந்தவருக்கு நீங்கள் வாங்கி கொடுத்துக்கும் பொது உங்கள் மீது நல்ல பிம்பத்தை ஏற்படுத்தும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்