valentines day 2023: சிவபெருமானிடம் காதலைக் குறித்து பார்வதி கேட்ட கேள்வியும், விடையும்..
பிப்ரவரி 7 அன்று தொடங்கும் காதலர் வாரம், காதலர்களின் திருவிழா. உலகம் முழுக்கவுள்ள பல நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காதல் ஜோடிகளுக்கு பாடமாக இருக்கும் சிவன், பார்வதி கதையை தெரிந்து கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் அது மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையைக் கற்றுத் தருகிறது. காதலில் வழியும் அன்பை வேறு விதமாக வரையறுக்கலாம். ஆனால் காதல் என்றால் என்ன என்பதற்கு சிவபெருமானின் பதில் தெரியுமா?
சிவனும் பார்வதியும்!
undefined
சிவன்-பார்வதியின் திருமண வாழ்க்கை உண்மையான காதலின் அடையாளம். இந்த உறவில் அன்பு, மரியாதை, அர்ப்பணிப்பு ஆகியவை இருப்பது புராணங்களின் வழியே நமக்கு தெரிகிறது. இவை தான் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காதல் கணம் ஒன்றில் தன் கணவன் சிவனிடம் பார்வதி காதல் என்றால் என்ன? காதலின் ரகசியம் என்ன? அதன் எதிர்காலம் என்ன? என்பது குறித்து கேட்டாராம்.
இந்த கேள்விக்கு புன்முறுவலோடு பதிலளித்த சிவபெருமான், பார்வதி தேவிக்கு குழப்பமில்லா வகையில் எளிய பதிலை அளித்தார். ஆனால் அதன் அர்த்தம் ஆழமாக இருந்தது. சிவபெருமானின் கருத்துப்படி, காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை கடக்கும் நெஞ்சுரம் கிடைக்கும்.
சிவன் சொன்ன பாடம்
பார்வதி காதல் குறித்து கேட்ட கேள்விக்கு சிரித்தக் கொண்டே பதிலளித்தார் சிவபெருமான். 'பார்வதி, உன் கேள்வியிலே பதில் இருக்கிறது' என்றும் கூறினார். அவர் பார்வதிக்கு அன்பின் வரையறையை முழுவதுமாக விளக்கினார். 'பார்வதி நீ அன்பின் பல வடிவங்களை காட்டினாய். என் மானத்திற்காக நீ உயிரைத் துறந்தபோது, என் உலகம், வாழ்க்கை, கடமைகள் அனைத்தும் ஆதாரமற்று போனது. என் அன்பே, நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை. நீ இல்லாமல், என் உலகம் முழுமையடையாமல் இருப்பதே உண்மையான அன்பு'என்றார் சிவபெருமான்.
அன்பின் மூன்று விதிகள்
கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் அன்பும், அர்ப்பணிப்பும், மரியாதையும் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கைக்கு அடிப்படை என்பதை சிவன் சொல்லும் அன்பின் பாடம் மக்களுக்குச் சொல்கிறது. அன்னை பார்வதி, கணவர் சிவபெருமானுக்காக தன் உயிரைக் கூட தியாகம் செய்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, காதல் உறவாக இருந்தாலும் சரி, வாழ்க்கைத் துணைவர்களின் பரஸ்பர மரியாதை அவர்களின் உறவை பலப்படுத்தும்.
இதையும் படிங்க: மகா சிவராத்திரியில் எந்த மலர்களால் சிவபெருமானை வழிபட்டால், ஜென்ம பாவம் நீங்கி முழுப்பலன் கிடைக்கும்?
ஒருவரை பற்றி ஒருவர் தெரிந்துகொள்ளுதல்
சிவனும், பார்வதியும் பல பிறவிகளுக்கு ஒருவருக்கொருவர் துணையாக இருந்தனர். அவர்கள் எப்போதும் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் தொடர்ந்து முயற்சிகள் செய்தார்கள் என கூறப்படுகிறது. ஒரு அன்பான தம்பதிக்கு இது மிகவும் முக்கியமானது. இதுவே உறவில் உள்ள இடைவெளியை முடிவுக்குக் கொண்டுவருகிறது.
ஒவ்வொரு ஜோடிக்கு மத்தியிலும் சண்டைகள், மோதல்கள் பொதுவானவை. சின்ன பாராட்டு கூட உறவுகளின் கசப்பை நீக்கும் என்று கூறப்படுகிறது. இது தம்பதியினருக்கு இடையிலான உறவை மேம்படுத்துகிறது. அதனால் மோதல்களை புரிந்து கொண்டு, அதை சரி செய்து உறவை வளர்க்க வேண்டும். அதுவே காதல் என்கிறார்கள் சிவனும், பார்வதியும்.. காதலர் தின வாழ்த்துகள்.!
இதையும் படிங்க: பெட்ரூமில் காதலருக்காக சாக்லேட்டா உருகும் பெண்கள்.. உலக நாடுகளின் வினோத காதலர் தின கொண்டாட்டங்கள் தெரியுமா?