கேன்சரை தடுக்கும் லெமன் – எலுமிச்சையின் அல்டிமேட் யூஸ் என்னென்ன தெரியுமா…?

First Published May 8, 2018, 4:46 PM IST
Highlights
Uses of lemon

  1. புற்று நோய்யை எதிர்க்கும் சக்தி உடையது

புதிதாக பறிக்கப்பட்ட பழங்களில் இருப்பது போலவே எலுமிச்சை பழத்திலும் புற்று நோயை எதிர்க்கும் சத்துகள் இருக்கவே செய்கின்றன. கடந்த செப்டம்பர் 2017ல் நடத்தப்பட்ட ஆய்வுகள் எலுமிச்சையிலிருந்து கிடைக்கும் சிட்ரஸ் பழச்சாறில் புற்றுநோயை குணப்படுத்துவதற்கான கூறுகள் உண்டென கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எலுமிச்சை சாறில் இருக்கும் விட்டமின்கள் உடலில் உள்ள உயிரணுக்களை பாதுகாப்பதில் முக்கியபங்கு வகிக்கின்றன.

      எலுமிச்சையில் வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஃபைபர் போன்ற மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் எலுமிச்சை தோலில் உள்ள டி-லோமோனைன் நுரையிரல், கல்லீரல் புற்றுநோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.

2.    தோலில் உள்ள சுருக்கங்களை போக்கலாம்

ஆண்டுகள் கடந்து வயது ஆவதை யாராலும் தடுக்க முடியாது. வயதினால் வரும் முகச்சுருக்கங்களை இயற்கை வழியில் குறைக்கமுடியும். ஆமாங்க எலுமிச்சையில் உள்ள என்சைம்கள் மற்றும் எலுமிச்சையில் உள்ள விட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது. தோல் தளர்வதை தவிர்க்க உதவுகிறது.

தோல் சுருக்கங்களை போக்க நம் வீட்டிலே இருக்கும் ஒரே கைவைத்தியம் லெமன் தாங்க. எலுமிச்சை சாறு எடுத்து அதை முகத்தில் தடவி வந்தால் தோல் சுருக்கம் வருவது குறைகிறது என அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மடாலாஜி கூறுகிறது.

3.   உடல் எடை குறைக்க உதவுகின்றன

உடலின் கலோரியை அதிகரிக்கும் டீ, காபி மற்றும் கோலா வகையறாக்களை குடிப்பதை தவிர்த்து லெமன் ஜூஸ் குடிப்பதால் உடல் எடை குறைய உதவுகின்றன. அதுமட்டுமில்லாமல் லெமன் ஜூஸில் கலோரி ஜூரோ என்பதால் உங்கள் டயடுக்கான உணவுப் பட்டியலில் இதற்கு எப்போதும் இடம் கொடுக்க மறக்காதீர்கள்.

4.       உடலில் உள்ள நச்சுத் தன்மையை வெளியேற்ற

எலுமிச்சை நீரில் கலந்து குடித்துவந்தால் உடலில் உள்ள நஞ்சுக்கள் வெளியேறி விடுகின்றன. இதனால் செரிமான அமைப்பும் மேம்படுகின்றன.

5.        தொண்டை வலிக்கான நிவாரணி

சூடான தண்ணீரில் எலுமிச்சையும் தேனும் கலந்து குடிப்பதால் அது தொண்டை வலிக்கு நிவாரணியாக உள்ளது. இது மருத்துவ அளவில் நிரூபிக்கப்பட்டது . எலுமிச்சை வைரஸ் தொற்றுக்கு நிவாரணியாக உள்ளது.

 

click me!