
தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள கண்டிப்பாக உணவு முறையிலும் மாற்றம் வேணும் அல்லவா..?
சிக்கன், கத்தரிக்காய், மாங்காய் உள்ளிட்டவற்றை அதிகமாக எடுத்துக்கொண்டாலும் உடல் உஷ்ணம் அதிகமாகும். அதே வேளையில் ஏற்கனவே கோடை வெயில் அதிகரித்து காணப்படுவதால் உடல் அதிக உஷ்ணத்துடன் இருக்கும்.
இது போன்ற தருணத்தில் ஏதாவது எளிமையாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருக்கும்.
இதனால் நாம் தேர்வு செய்வதோ பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்ட ஜூஸ் மற்றும் ஐஸ் கிரீம்
ஆனால் இதனையெல்லாம் தாண்டி குழந்தைகளுக்கு பிடித்தவாறு புது டிஷ் ஒன்று செய்யலாம் வாங்க..
தேவையான பொருட்கள் :
இளம் நுங்குச் சுளைகள் - 3,
சர்க்கரை - 3 டீஸ்பூன்,
ரோஸ் சிரப் - 1 டீஸ்பூன்,
பால் - முக்கால் கப்,
சாரைப் பருப்பு அல்லது பிஸ்தா பருப்பு - கால் டீஸ்பூன்,
நெய் - அரை டீஸ்பூன்.
செய்முறை:
நுங்கின் தோலை நீக்கி மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய்யை சூடு செய்து, சாரைப்பருப்பை வறுத்தெடுக்கவும்.
பாலை நன்றாக காய்ச்சிக்கொள்ளவும்.
காய்ச்சி, ஆறிய பாலில் சர்க்கரை, ரோஸ் சிரப், அரைத்த நுங்கு, வறுத்த பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும்.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அருந்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
கோடைக்கு இதமாக நுங்கும் பாலும் சேர்ந்த அருமையான பானம் இது.
இந்த பானம் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற ஒன்று.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.