மக்களே..! உடனே இதை செய்யுங்க .. நமக்கு H2O தான் முக்கியம்..!

Published : Aug 05, 2019, 07:28 PM IST
மக்களே..! உடனே இதை செய்யுங்க .. நமக்கு H2O தான் முக்கியம்..!

சுருக்கம்

செரிமானத்தை மேம்படுத்தும். வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அரிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. 

மக்களே..! உடனே இதை செய்யுங்க .. நமக்கு  தான் முக்கியம்..!  

தாமிர பாத்திரம் இல்லை என்றாலும், நம் வீட்டில் பயன்படுத்தும் சாதாரண பிளாஸ்டிக் குடங்களாக இருந்தாலும் சரி, ஒரு சிறிய தாமிர துண்டை குடத்தில் போட்டு வைத்தால் போதும். எந்த சத்தும் இல்லாத  கேன் வாட்டர் கூட, நல்ல சத்து நிறைந்ததாக மாறி விடும்.

செரிமானத்தை மேம்படுத்தும். வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அரிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம். இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது.

இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும். கர்ப்பகாலத்தின் போது உங்களையும் உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால் தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.

புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.

வயதாகும் செயல்முறை குறையும். தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால் உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.

இப்படி பல நன்மைகளை தரும் தாமிர பாட்டில் தண்ணீரை அருந்துவது நம் உடலுக்கு நல்ல பலனை தரும் 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!