ஏர்டெல் அதிரடி அறிவிப்பு..! வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி...!

Published : Aug 05, 2019, 07:11 PM IST
ஏர்டெல் அதிரடி அறிவிப்பு..! வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி...!

சுருக்கம்

ஜியோ வருகைக்கு பிறகு மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் நஷ்டத்தை சந்திக்க தொடங்கினர்.

ஜியோ வருகைக்கு பிறகு மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் நஷ்டத்தை சந்திக்க தொடங்கினர். அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஜியோ உடனான போட்டியை சமாளிக்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் பெரும் நஷ்டத்தை தழுவி முடிவில் பெரும் திவாலானது.

இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது 3ஜி சேவையை கைவிடுவதாக அதிரடியாக அறிவித்து உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் அதிக நஷ்டத்தை சந்தித்ததே இதற்கு காரணம் என நிறுவனத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 12 கோடி இணையப் பயனாளர்களில், ஒன்பதரை கோடி மக்கள் சேவையை பயன்படுத்துவதால் 3ஜி சேவைக்கான சேவை சற்று குறைந்து உள்ளது என்பதை உணர்ந்த நிறுவனம் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

மற்றபடி ஏற்கனவே அமலில் உள்ள 2ஜி மற்றும் 3ஜி சேவை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக ஆறு முதல் ஏழு கட்டங்களாக பிரித்து 3ஜி சேவையை அமலில் இருந்து நீக்க திட்டமிட்டு அதன்படி வரும் செப்டம்பர் முதல் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்த நடவடிக்கையைத் தொடங்க முடிவு செய்து உள்ளது ஏர்டெல் நிறுவனம்.

பின்னர் படிப்படியாக வரும் மார்ச் மாதத்திற்குள் 3ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் முழுமையாக நீக்கிவிடும் என கூறப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் அதுவரை 3ஜி சேவையில் தற்போது இருக்கக்கூடிய திட்டம் அமலில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது கூடுதல் தகவல்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்