
அமெரிக்க பெண்ணுக்கு காரைக்குடி தமிழன் மேல் காதல்...! செம ஜோராக நடந்த டும் டும் டும்...!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி என்ற பகுதியில் வசித்து வரும் செல்லையா என்பவரின் மகன் கந்தசாமி ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
அப்போது அங்கு அவருக்கு அமேசான் நிறுவனத்தில் வேலை கிடைத்து உள்ளது. அந்த ஒரு தருணத்தில், தான் பணிபுரிந்து வந்த பகுதிக்கு அருகே காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்த எலிசபெத் என்ற பெண்மீது தந்த சாமிக்கு காதல் ஏற்பட்டு உள்ளது.
இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சென்ற வாரம் தமிழகம் திரும்பிய இவர்கள் தங்களுடைய காதல் பற்றி பெற்றோர்களிடம் தெரிவித்து அவர்களின் சம்மதம் கிடைத்த உடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த திருமணத்தில் இருவீட்டார் உறவினர்களும், சுற்றுவட்டார கிராம மக்களும் சென்று மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.இந்த திருமண புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.