பட்டதாரிகள் குரூப் 4 எழுதி வேலை வாங்க முடியுமா..? இதில் உள்ள சிக்கல் என்ன..?

By ezhil mozhiFirst Published Jul 11, 2019, 2:22 PM IST
Highlights

தமிழக அரசால் நடத்தப்பட்டு  வரும் குரூப் 4 தேர்வு முறைக்கான குறைந்தபட்சம் முதல் அதிக பட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசு நிர்வாக செயலாளருக்கு உயர்நீதிமனற்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது. 
 

தமிழக அரசால் நடத்தப்பட்டு  வரும் குரூப் 4 தேர்வு முறைக்கான குறைந்தபட்சம் முதல் அதிக பட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசு நிர்வாக செயலாளருக்கு உயர்நீதிமனற்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது. 
 
பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக பட்டதாரி இளைஞர்களும் அரசு வேலை கிடைத்தால் போதுமென நினைத்து தங்களது கல்வித் தகுதியும் பார்க்காமல் அரசு வேலையாக இருந்தால் மட்டுமே போதும். அது சாதாரண வேலையாக இருந்தாலும் பரவாயில்லை... என்ற மனநிலையில் உள்ளனர்.

இதனையடுத்து தற்போது அரசு அறிவித்து வரும் எந்த ஒரு வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பாக இருந்தாலும், அதாவது குரூப் 4, குரூப் 3, குரூப் 2, குரூப் 1 என அனைத்திற்கும் விண்ணப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு tnpsc குரூப் 4 எழுதி, அதில் தேர்ச்சி பெற்ற சக்கரைசுவாமி என்பவர் பட்டதாரி என்பதால் அவருடைய கல்வித் தகுதி அதிகம் என காரணம் காட்டி வேலை வழங்கவில்லை இதனை எதிர்த்து, தேர்வில் தான் தேர்ச்சி பெற்று உள்ளதாகவும், எனவே அரசு வேலை வழங்க வேண்டும் என  கூறி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார் சக்கரை சாமி.

இது குறித்த விசாரணை இத்தனை ஆண்டுகளாக நடைபெற்று இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குரூப் 4 எழுதுவதற்கு தேவையான குறைந்தபட்சம் அதிகபட்சம் கல்வித்தகுதியை மூன்று மாதத்திற்குள் நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசின் நிர்வாக செயலருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

மேலும் அதிக கல்வித் தகுதியுடன் அரசு வேலை பெறும் நபர்கள் வேலை கிடைத்தவுடன் சரிவர வேலை செய்வது இல்லை என்றும் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி... வரும் 14-ம் தேதியே விண்ணப்பிக்க கடைசி தேதி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

click me!