குராஜாத்தில் கலக்கிய டிரம்பின் மனைவி -மகள்..!

By ezhil mozhiFirst Published Feb 24, 2020, 1:12 PM IST
Highlights

ட்ரம்ப் குடும்பத்தினரை வரவேற்க இந்திய கலாசார நடனங்கள், மேளதாளங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இவரது வருகையையொட்டி 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குராஜாத்தில் கலக்கிய டிரம்பின் மனைவி -மகள்..! 

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக முதல் முறையாக இன்று இந்தியா வந்தடைந்தார். அவருக்கு அகமதாபாத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அமெரிக்க அதிபராக கடந்த 2017ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் இந்தியாவுக்கு வந்தது கிடையாது. அவருடைய மகள் இவாங்கா மட்டும், தொழில் முறை பயணமாக இந்தியா வந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்தாண்டு 50 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்ற ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், டிரம்ப்பும் கலந்து கொண்டனர். அப்போது, இந்தியாவுக்கு பயணம் வரும்படி டிரம்புக்கு மோடி அழைப்பு விடுத்தார். அதை டிரம்ப் ஏற்றார். அதன்படி, முதல் முறையாக இந்தியாவுக்கு இன்று டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக தனது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜேர்டு குஷ்னர் மற்றும் அமெரிக்க உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவும் வருகிறது. 

ட்ரம்ப் குடும்பத்தினரை வரவேற்க இந்திய கலாசார நடனங்கள், மேளதாளங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இவரது வருகையையொட்டி 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

டிரம்ப் தனது குடும்பத்தினருடன் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள அனைத்து கலாச்சாரா நிகழ்வுகளை பார்வையிட்டார். மனைவி மற்றும்  மகள் மிகவும் ஆர்வமாக அனைத்தையும் பார்வையிட்டு வியந்தனர்.
 
மனைவி மற்றும் மகள் அணிந்திருக்கும் ஆடை யை பார்க்கும் போது... தாய் - மகள் இருவருக்கும் வயதே ஆக விலை போல தோன்ற வைக்கிறது 

click me!