மக்களே..! கிளம்பும் போது மட்டுமல்ல.. திரும்பி வரும் போதும் சிறப்பு ஏற்பாடு..! தமிழக அரசு அதிரடி..!

By thenmozhi gFirst Published Jan 10, 2019, 1:46 PM IST
Highlights

பொங்கலுக்காக இதுவரை இல்லாதஅளவிற்கு இந்த ஆண்டு ஆறு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர்.

மக்களே..! கிளம்பும் போது மட்டுமல்ல.. 

பொங்கலுக்காக  இதுவரை இல்லாதஅளவிற்கு இந்த ஆண்டு ஆறு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் நாளை முதல் 4  நாட்களுக்கு 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து ஜனவரி 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை 14,263 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து, சென்னைக்கு 3,770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் பிறபகுதிகளில் இருந்து 10,445 பேருந்துகளை பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன. சென்னையில் சிறப்பு பேருந்து முன்பதிவிற்காக கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்களும்தாம்பரம் சானிடோரியத்தில் 2 முன்பதிவு மையங்களும் உள்ளது.

மாதவரம் மற்றும் பூவிருந்தவல்லியில் தலா ஒரு முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதே போன்று பொங்கல் முடிந்து 
ஊர் திரும்பும் பயணிகளுக்காகவும்....ஜனவரி 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை சுமார் 11,500 அரசு பேருந்துகள் இயக்கப்ப உள்ளன என்பது கூடுதல் சிறப்பம்சம் கொண்டதாக உள்ளது 

ஆக மொத்தத்தில் இந்த பொங்கல் பொது மக்களுக்கு மிக சிறப்பாக  அமையும் என்பதால் எந்த மாற்றமும் இருக்காது காரணம், இது வரை இல்லாத அளவிற்கு ஆறு நாட்கள் விடுமுறை என்றால் கொண்டாட்டம் பலமாக தானே இருக்கும்..! 

click me!