கவுன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட சில கேள்விகள் மிகவும் கடினமானவை என்பதால் போட்டியாளர்களால் பதிலளிக்க முடியவில்லை. இந்த பதிவில், அந்த கடினமான கேள்விகள் சிலவற்றைப் பார்ப்போம்.
கவுன் பனேகா க்ரோர்பதி என்ற நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலளித்தால் கோடிகளில் பணத்தை வெல்ல முடியும். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட சில கடினமான கேள்விகள் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்தே வெளியேற வழிவகுத்தது. அப்படி இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட 10 கடினமான கேள்விகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் டர்பன், பிரிட்டோரியா மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் மகாத்மா காந்தியின் உதவியுடன் அமைக்கப்பட்ட மூன்று கால்பந்து கிளப்புகளின் பெயர் என்ன?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு ‘Truth Seekers, Non – Violents, Passive Resisters, Non co-operators.’ Passive Resisters ஆகிய விருப்பங்கள் கொடுக்கப்பட்டன. இதற்கான பதில் Passive Resisters.
‘இந்த மாநிலங்களில் எந்த மாநிலத்தின் கவர்னர்கள் அதிக எண்ணிக்கையில் இந்தியாவின் குடியரசுத் தலைவர்களாக ஆனார்கள்?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கான விருப்பங்கள்- ‘ராஜஸ்தான், பீகார், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை வழங்கப்பட்டது. இதற்கு சரியான பதில் பீகார்.
பெற்றோரிடம் இருந்து குழந்தைகள் விலகி ஓட இந்த 5 விஷயங்கள் தான் காரணம்!!
எந்த இந்திய பந்துவீச்சாளர் வீசிய பந்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் தனது 100வது முதல் தர சதத்தை எட்டினார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. 'பாகா ஜிலானி, கமாண்டூர் ரங்காச்சாரி, கோகுமல் கிஷன்சந்த் மற்றும் கன்வர் ராய் சிங் ஆகிய விருப்பங்கள் வழங்கப்பட்டது. இதற்கான சரியான பதில் கோகுமல் கிஷன்சந்த்.
'ரௌசா-இ-முனவ்வாரா' என்ற பெயரில் அறியப்பட்ட இந்த முகலாய கட்டிட அமைப்பு எது? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஷாலிமார் பாக் சினி கா ரௌசா, ஹுமாயூனின் கல்லறை மற்றும் தாஜ்மஹால்.' சரியான பதில் தாஜ்மஹால்.
‘புராணங்களில், ஹிரண்யகசிபுவின் மனைவி மற்றும் பிரஹலாதனின் தாயார் பெயர் என்ன?’ என்ற கேள்வி, ‘கபிஞ்சலா, கயாது, கமலாக்ஷி மற்றும் கௌஷிகி’ என்று கொடுக்கப்பட்ட விருப்பங்கள் வழங்கப்பட்டது. இதற்கு.’ சரியான பதில் கயாது.
எந்த வரலாற்று அல்லது புராண நபருக்குப் பிறகு இலங்கை தனது முதல் செயற்கைக்கோளுக்கு பெயரிட்டது?’ விருப்பங்கள் - ‘குபேர், புத்தர், விபீஷணன், ராவணன்.’ சரியான பதில் ராவணன்.
குறைந்து வரும் Y குரோமோசோம்கள் எண்ணிக்கை! கேள்விக்குறியாகும் ஆண் குழந்தை பிறப்பு!
நோபல் பரிசு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, ஒவ்வொரு வருடமும் எந்த வகை நோபல் பரிசு வழங்கப்படுகிறது? விருப்பங்கள் - வேதியியல், இயற்பியல், அமைதி மற்றும் பொருளாதாரம். சரியான பதில் பொருளாதாரம்.
‘ராஜ்யசபாவின் எந்த துணைத் தலைவர் இந்தியாவின் குடியரசுத் தலைவரானார்?’ விருப்பங்கள் - ‘வராஹகிரி வெங்கட கிரி, பிரதீபா பாட்டீல், ஜாகீர் உசேன், சங்கர் தயாள் சர்மா.’ சரியான பதில் பிரதிபா பாட்டீல்.
‘ஜாம்ஷெட்ஜி நுசர்வாஞ்சி டாடாவின் மூளையில் உருவான பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் முதல் இந்திய இயக்குநர் யார்?’ விருப்பங்கள் – ‘டோராப்ஜி டாடா, சி.வி. ராமன், ஹோமி ஜஹாங்கீர் பாபா மற்றும் சதீஷ் தவான்.’ சரியான பதில் சி.வி.ராமன்.
இந்த விஞ்ஞானிகளில் யார் பெயரிடப்பட்ட கால அட்டவணையில் வேதியியல் உறுப்பு இல்லை?’ விருப்பங்கள் - ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஆல்பிரட் நோபல், தாமஸ் எடிசன், என்ரிகோ ஃபெர்மி.’ சரியான பதில் தாமஸ் எடிசன்.