அதிகாலையில் உடலை சூடாக்க உதவும்..எளிய வழிமுறைகள்..? கொஞ்சம் மாத்தி யோசிங்க பாஸ்!

manimegalai a   | Asianet News
Published : Jan 10, 2022, 09:52 AM IST
அதிகாலையில் உடலை சூடாக்க உதவும்..எளிய வழிமுறைகள்..? கொஞ்சம் மாத்தி யோசிங்க பாஸ்!

சுருக்கம்

குளிர்காலத்திற்கு, உடலை சூடாக்க சில யோகா முறைகள் உதவுகின்றன. அவற்றை இப்போது பார்க்கலாம்.  

குளிர்காலத்திற்கு, உடலை சூடாக்க சில யோகா முறைகள் உதவுகின்றன. அவற்றை இப்போது பார்க்கலாம்.
குளிர்காலமானது, நம் அனைவருக்கும் கோடையில் இருந்து விடுமுறை அளிப்பதில் உறுதி அளித்தாலும், ஒரு சில உடல் நல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. சிலருக்கு குளிர் காலத்தில், சரும பிரச்சனைகள் ஏற்படும். ஒரு சிலருக்கு உணவில் மற்றம் தேவைப்படும். பெரும்பாலும், குளிர்காலமானது அதிகமான குளிரை வெளிப்படுத்துவதால், இந்த காலகட்டத்தில் பலரும் உடலை சூடாக வைத்துக்கொள்வதற்கான வழியைத் தேடுகின்றனர். முக்கியமாக காலைப் பொழுதுகளில் உடலை எப்படி வெப்பப்படுத்துவது என சிந்திக்கின்றனர். 

இதற்கு சில யோகா முறைகள் உதவுகின்றன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

யோகாசனம்:

இந்த குளிர்காலத்தில் அதிகாலையில் எழுவது என்பது கடினமான காரியமாக இருக்கலாம். காலையில் மீண்டும் ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்று மனதிற்குத் தோன்றும். எனவே, நாம் எப்போதும் அதிகாலையில் வெகு நேரம் கழித்தே எழுந்திருப்போம். அதிகாலையில் அதிக குளிரைத் தாக்குப்பிடிக்க உடலை வெப்பப்படுத்துவது முக்கியமாகும். பின்வரும் சில யோகா முறைகள் நமது உடலை சூடாக்குவதற்கு உதவும் யோகா முறைகளாக உள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

​மத்சய ஆசனம்:

தோள்பட்டை மற்றும் கழுத்தை தளர்த்தி, உங்கள் உடலை முன்னோக்கி முழுவதுமாக நீட்டுவதன் மூலம் இந்த ஆசனத்தை நீங்கள் துவங்க வேண்டும். இந்த யோகா முறையை நாம் செய்யும்போது நமது மார்பு பகுதி அகலமாகத் திறந்து இருக்கும். இந்த யோகா பயிற்சியானது நமது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. நமது நரம்பு மண்டலத்தில் இது செயல்படுவதன் காரணமாக நமது உடல் வெப்பநிலையானது அதிகரிக்கிறது.

செய்யும் முறை:

முதலில் உங்கள் முதுகில் படுத்துக்கொள்ளுங்கள். இந்த நிலையில் இருக்கும்போது உங்கள் முதுகில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே பாய் அல்லது தலையணையைக் கொண்டு உங்கள் முதுகு பகுதிக்கு முட்டுக்கொடுக்கவும்.

பிறகு உங்கள் மார்பு பகுதி மேல்நோக்கி இருக்கும் வகையில் அதை உயர்த்திக்கொள்ளுங்கள். இந்த நிலையில் உங்கள் தலை சற்று தாழ்ந்து இருக்கும். பிறகு உங்கள் கால்களை மடக்கி சம்மணமிட்டு அதன் மீது கைகளை வைத்துக்கொள்ளவும். இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்த பிறகு பொறுமையாகக் கால்களையும் கைகளையும் தளர்த்தவும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 நிமிடங்கள் வரை இந்த பயிற்சிகளைச் செய்வதன் மூலம் உங்கள் உடல் வெப்பத்தை அதிகரிக்க முடியும்.

​அனாஹதாசனம்:

மெல்டிங் ஹார்ட் போஸ் அல்லது நாய்க்குட்டி போஸ் என அழைக்கப்படும் இந்த யோகா முறையில் முன் கைகளை நேராக நீட்டி செய்கிறோம். இந்த முறையை செய்வதால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் நாள்பட்ட தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளைச் சரி செய்ய முடியும். மனதிற்கும் உடலுக்கும் அமைதியை அளிக்கும் ஒரு ஆசனமாக இது உள்ளது. மேலும் குளிர்காலங்களில் உடலை வெப்பப்படுத்துவதற்கும் இது உதவுகிறது.

செய்யும் முறை:

இந்த முறையை செய்ய முதலில் கைகளைத் தரையில் ஊன்றி நான்கு கால் விலங்குகள் போன்ற வடிவத்திற்கு வரவும். இந்த நிலையில் உங்கள் இரு கால்களும் பின்னால் சமமாக இருக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் இடுப்பிற்கு முன்னால் உள்ள முதுகு பகுதியைக் கீழ்நோக்கி செலுத்தவும். அதாவது உடலின் பாதி பகுதி படுத்த நிலையில் இருக்க வேண்டும். மேலும் அதே நிலையில் உங்கள் கைகளை முன்னோக்கி தரையில் நீட்டிக் கொள்ளவும். உங்கள் முகமானது தரையில் படும் அளவில் நீங்கள் குனிய வேண்டும். ஆனால் உங்கள் கால்கள் இந்த நிலையிலும் முட்டி போட்ட நிலையிலேயே இருக்க வேண்டும். இந்த நிலையிலிருந்த வண்ணம் 5 முறை சுவாசத்தை ஆழமாக உள்ளிழுத்து வெளியிடவும்.

மர்ஜாரி ஆசனம் மற்றும் பிட்டிலாசனா:

நம் மனது அதிக பதற்றத்துடன் இருக்கும்போது உடலில் உள்ள சக்கரங்களில் பிரச்சனை ஏற்படுகிறது. மர்ஜாரி ஆசனமானது பதற்றத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த ஆசனமானது உடல் வெப்பத்தை வெளியிடவும், உங்கள் ஆற்றல் மையங்களைத் திறக்கவும் மேலும் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

செய்யும் முறை:

இந்த ஆசனத்தை செய்வதற்கு முதல் ஆசனம் போலவே முதலில் இரண்டு கைகளைத் தரையில் ஊன்றி நான்கு கால் விலங்குகள் போன்ற நிலைக்கு வர வேண்டும். உங்கள் மணிக்கட்டுகள் இணையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். பிறகு உங்கள் முதுகெலும்பைத் தளர்த்தி உடலைக் கீழ்நோக்கி இறக்கவும். இந்த நிலையில் இருக்கும்போது மூச்சை ஆழ்ந்து இழுக்கவும். எனவே, மேலே கொடுக்கப்பட்ட வழிமுறைகளைபின்பற்றுவதால்  மன அழுத்தம், பதட்டம் மற்றும் நாள்பட்ட தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளைச் சரி செய்ய முடியும்.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்