
இன்றைய நவீனவாழ்க்கை முறையில், தங்கள் முக அழகை மேம்படுத்துவதற்கு அலோபதி, ஆயுர்வேதம், சித்தா, அக்குபஞ்சர், ஹோமியோபதி என்று பல்வேறு சிகிக்சை முறைகளை மக்கள் கையில் எடுத்துள்ளனர். ஆனால், இன்னுமொரு சிறந்த மாற்று மருத்துவமுறை அந்த அளவுக்கு மக்களைச் சென்றடையாமல் உள்ளது.
அரோமாதெரபி என்பது அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் நறுமண தாவரங்களின் சாறுகளைக் கொண்டு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அல்லது நோய்கள் வராமல் தடுக்க உதவும் மருத்துவமுறை ஆகும். குறிப்பாகச் சொல்வதானால், அரோமாதெரபி இயற்கையாக தாவரங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் சாறுகளின் வாசனை மூலம் உடல், மன நலன்களை மேம்படுத்த சிகிச்சை அளிக்கும் கலை மற்றும் அறிவியலே ஆகும்.
அரோமாதெரபி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த அத்தியாவசியமான நறுமண எண்ணெய்கள் நோயாளிகளின் உடல் மற்றும் மனதை மிகப்பெரிய அளவில் மேம்படுத்துகின்றன. இந்த எண்ணெய் வகைகள், நுகரும் உணர்வையும், உடலில் நேர்மறை விளைவுகளையும் தூண்டுகின்றன. நறுமண எண்ணெய்களில் இருந்து வரும் மணத்தை நுகரும்போது, அது மூளையின் செயல்பாட்டையும், மற்ற உடலியல் செயல்பாடுகளையும் தூண்டுவதாக பெருமளவில் நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஸ்பாக்கள் மற்றும் ஆரோக்கிய மையங்களில், மக்கள் புத்துணர்ச்சியுடன் உணர அரோமாதெரபி பயன்படுத்தப்படுகிறது. மேலும் சில மணிநேரங்கள் திடமான உறக்கத்தைப் பெறுவதற்காக, தூங்க செல்வதற்கு முன் இதைப் பயன்படுத்த வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
எனவே அரோமாதெரபி நம் சருமத்திற்கு எவ்வாறு பயனளிக்கிறது? என்பது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இது நம் உடலில் நன்மை பயக்கும் ஹார்மோன்களை வெளியிடுகிறது. ஏனெனில், அது நமது மூளை, ஒரு தளர்வான நிலையில் இருப்பதைக் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நமது உணர்ச்சிகளால் நமது தோல் மிகவும் பாதிக்கப்படுகிறது. அரோமாதெரபி தொடர்ந்து செய்யும் போது, தோல் மற்றும் மனதில் வியக்க வைக்கும் நன்மைகளை ஏற்படுத்தும்.
லாவெண்டர் எண்ணெய்
இந்த எஸன்ஷியல் எண்ணெய் உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது மற்றும் மனதில் ஒரு நிதானமான நிலையைத் தூண்டுகிறது. லாவெண்டர் எஸன்ஷியல் எண்ணெய், சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் சோர்வை நீக்குகிறது.
சந்தன எண்ணெய்
சந்தனத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக அறியப்படுகிறது, மேலும் சருமத்திற்கு அதிக ஈரப்பதம், நீரேற்றம் தருகிறது.
ரோஸ்மேரி எண்ணெய்
இந்த எஸன்ஷியல் எண்ணெய் உங்கள் இரத்த நாளங்களை விரிவுபடுத்துவதன் மூலம், உங்கள் இரத்தம் அதிக ஆக்ஸிஜனை உறிஞ்சுவதற்கு அனுமதிக்கிறது. ஆரோக்கியமான, ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தம் உடலுக்கும் சருமத்திற்கும் சிறந்த ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
இந்த அத்தியாவசியமான நறுமண எண்ணெய்கள் நோயாளிகளின் உடல் மற்றும் மனதை மிகப்பெரிய அளவில் மேம்படுத்துகின்றன. மேலும், நோய் எதிர்ப்பு அமைப்பு, வலி மற்றும் எரிச்சல் குறைப்பு, தோல்நோய் மற்றும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள் போன்ற நுண்கிருமிகளை கொல்வதிலும் உறுதுணையாக உள்ளது. இந்த நறுமண எண்ணெய்கள் பச்சிலைகள், பூக்கள், மரங்கள், தண்டுகள், இலைகள், வேர்கள், கனிகள் போன்றவற்றில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இதில் பொதுவானதாக உள்ளவை யூகலிப்டஸ், ரோஸ், எலுமிச்சை தைலம், மல்லிகை, பாதாம், சாமந்தி எண்ணெய்களாகும்.
இந்த இயற்கை எண்ணெய்களின் வேறுபட்ட கலவைகள், பிற மூலிகை தயாரிப்புகளைக் காட்டிலும் சிறந்ததாகக் கூறப்படுகிறது. காரணம், இதில் உள்ள மிகச் சிறிய வாசனை மூலக்கூறுகள் நுகரும்போதோ, தோலின் வழியாகவோ உடலால் உடனடியாக ஈர்க்கப்பட்டு ரத்தநாளங்களில் நுழைந்து உடல் முழுக்கச் சென்று நோயைக் குணமாக்குவதற்கான சக்தியை உடலுக்கு அளிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், மனநிலை விரிவு, அறிவாற்றல் செயல்பாடுகளான நினைவுத்திறன், மனஒருநிலை, தூக்கம் மேம்பாடு உள்ளிட்ட எண்ணற்ற பிரச்னைகள் நறுமண மருத்துவச் சிகிச்சை சிகிச்சை மூலம் சரி செய்யப்படுகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.