
கோடை வெயிலால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது, யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவார்கள், எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
1.யாருக்கெல்லாம் ஆபத்து ?
முதியோர்கள், குழந்தைகள், வெயிலில் வேலை செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் இவர்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது
2 வெப்பத்தை தணிக்க என்ன செய்யலாம் ?
மோர் அதிகம் அருந்தலாம் .
தினமும் ஒரு இளநீர்
தினமும் சோற்று கற்றாழை சாறு
சந்தன கலவையை முகத்தில் பயன்படுத்துவது
3.வெப்பத்தை தடுக்கும் பழங்கள்
வெள்ளரிக்காய், தர்பூசணி, மாதுளை , கிவி பழம், பேரிக்காய், சிவரிக்கீரை இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நம் உடலில் உள்ள உஷ்ணம் நீங்கி குளிமை அடையும்
4.வெயிலின் பிடியில் அகபடமால் இருக்க என்ன செய்ய வேண்டும் ?
இரண்டு முறை தினமும் குளித்தல்
அதிக அளவில் நீர் பருகுதல்
மது அருந்தாமல் இருப்பது நல்லது
காட்டன் போன்ற மிருதுவான ஆடைகளை அணிதல் சருமத்திற்கு மிக நல்லது
வெயில் நேரத்தில் வாகனத்தில் பயணிக்காமல் இருத்தல்
இதனை பின்பற்றினாலே வெயிலினால் ஏற்படும் பாதிப்பை பெரிதும் தவிர்த்துக் கொள்ளலாம்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.