
நேரம் இல்லாமல் தனியாக அமர்ந்து மனம் விட்டு கூட பேச முடியாமல் இருக்கும் தம்பதிகளாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இது போன்று இருக்க முயற்சி செய்து பாருங்கள்.
தினமும் தன் கணவரிடம் ஐலவ் யூ ன்னு சொல்லுங்க
கணவர் அலுவலகத்திற்கு செல்லும் போது தினமும் அவருக்கு ஒரு முத்தம் ஆசையாக கொடுத்து அனுப்பினால், அன்று முழுக்க உற்சாகமா உங்கள் நினைப்பிலேயே வேலை செய்வார்
உங்கள் கணவர் ஏதாவது ஒரு முடிவு செய்தல் அது சரியாதான் இருக்கும் என நம்புங்கள். ஒரு வேலை தவறாக இருந்தால், அன்பாக சொல்லி புரிய வையுங்கள்
எப்பொழுதும் தாய் வீட்டை புகழ்ந்து தள்ளாதீர்கள். அதற்கு பதிலாக அவர் காதில் படும்படி, என் கணவர் என்னை எவ்வளவு நல்லா வெச்சிருக்கிறார் தெரியுமா என , புகழ் பாடுங்கள் அவர் உண்மையில் உங்களிடம் அன்பாக மாறி விடுவார்
வீட்டிற்கு வந்ததும், அவரிடம் எந்த வாதமும் செய்யாமல் குழந்தை போல் விளையாடி பாருங்கள்... மனதிலேயே சிரிப்பார்
உங்கள் கணவர் குடும்பத்தை பற்றி குறை கூற வேண்டாம்
எதற்காவது சண்டை இருந்தாலும், உடனே அதனை மறந்து மீண்டும் கணவரிடம் நன்கு பேச தொடங்குங்கள்
இதை முயற்சி செய்து பாருங்கள், வாழ்வில் வசந்தம் எப்படி இருக்குனு தெரியும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.