கிணற்றில் வற்றா தண்ணீர் வேண்டுமா ? இதை செய்து பாருங்க....

 
Published : Mar 14, 2017, 12:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
கிணற்றில் வற்றா தண்ணீர் வேண்டுமா ? இதை செய்து பாருங்க....

சுருக்கம்

tips for summer

பழங்காலம் முதல் கிணறு என்பது நாம் இருக்கும் பகுதியில் ஆங்காங்கு பார்க்க முடியும்.அவ்வாறு தோண்டப்படும் கிணறுகள் எப்படி தோண்டப்படுகிறது. அதில் தண்ணீர் வற்றாமல்  இருக்குமா ? என்ற  கேள்விக்கெல்லாம்  பதில்  என்னவென்று பார்கலாம்.

எங்கு கிணறு தோண்டலாம் ?

நிலபரப்பில் எங்கு அதிகமாக  புற்கள் காணப்படுகிறதோ ,அங்கு  நிலத்தடி நீர்  அதிகம் இருக்கும் என்பதை எளிதில் தெரிந்துக் கொள்ள முடியும் .அதே போன்று அவ்வாறு  தேர்வு செய்யப்படும்  இடத்தில தண்ணீர்  நல்ல  சுவையுடன் இருக்குமா என்ற  சந்தேகம்  எழும் அல்லவா ? அந்த  சமயத்தில்  நவதானியங்களை  அந்த இடத்தில் தூவி விடவேண்டும். அதற்கு  மறுநாள் , எறும்புகள்  அந்த   தானியங்களை எடுத்துச்சென்ற  வடு தெரியும். அதாவது அது நல்ல மண் வளம் மிக்க இடம் என்பதால் தண்ணீரும்  சுவையாக  இருக்கும் .

மாடு கண்டுபிடிக்கும் இடம்

வற்றாத தண்ணீர்  கிடைக்கும்  இடத்தை  கண்டுபிடிக்க , கிணறு வெட்ட தேர்வு செய்த பகுதியை சுற்றி  நான்கு பக்கமும்  அடைத்து, அந்த இடத்தில் பால் சுரக்கும் பசுக்களை மேய விட வேண்டும் . பின்னர் அந்த பசு தானாகவே குளிர்ச்சியான இடத்தில் சென்று படுத்துக்கொண்டு  அசை போடும்.அதே இடத்தில சில  நாட்களுக்கு தொடர்ந்து அந்த பசு  படுக்குமாம் .எந்த இடத்தில் அந்த பசு படுத்ததோ அந்த   இடத்தில் தான்  தண்ணீர் வற்றாமல் கிடைக்கும் என்பது பெரியோர்கள் தீர்மானித ஒன்று. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்