ஃபேவரைட் ட்ரெஸ்ஸில் சாயம் போகுதே என்று கவலையே வேண்டாம்; இதை மட்டும் செஞ்சா போதும்..!

Published : Oct 11, 2023, 01:12 PM IST
ஃபேவரைட் ட்ரெஸ்ஸில் சாயம் போகுதே என்று கவலையே வேண்டாம்; இதை மட்டும் செஞ்சா போதும்..!

சுருக்கம்

சாயம் போன உங்கள் பழைய துணியை புதுத்துணி போல பளிச்சென்று மாற்ற உதவும் சிம்பிள் டிப்ஸ் இங்கே.

பொதுவாகவே பலர் தங்களுக்கு பிடித்த நிறத்தில் தான் அதிக டிரஸ் வாங்குவார்கள். அதிலும் குறிப்பாக  பிடித்த நிறத்தில் பிடித்த டிரஸ் என்றால் சொல்லவே வேண்டாம், கட்டாயமாக வாங்கி விடுவார்கள். இப்படி அவர்கள் தங்களுக்கு பிடித்த நிறத்தில் வாங்கும் டிரஸ்ஸை பார்த்து பார்த்து வாங்கி தங்களை அழகு பார்ப்பார்கள். அப்படி அவர்கள் பார்த்து பார்த்து வாங்கிய டிரஸ்ஸில் சாயம் போய்விட்டால் அதை தூக்கி எறிய அவர்களுக்கு மனசு வராது. ஆனால் சாயம் போன இந்த டிரஸ்சை அவர்கள் பயன்படுத்தவும் மாட்டார்கள். இப்படி உங்களுடைய டிரெஸ்ஸும் சாயம் போயிருந்தால் அதை பழையபடி புதுசு போலாக்க ஒரு வழி இருக்கு தெரியுமா? அது குறித்து இங்கு பார்க்கலாம்..

சாயம் போன துணியை புதுசாக மாற்றும் முறை:
இந்த முறையில் நீங்கள் ஒரே நிறத்தில் இருக்கும் டிரெஸ்ஸை மட்டும் தான் பயன்படுத்த முடியும். வெவ்வேறு நிறத்தில் இருக்கும் டிரஸுக்கு இது உதவாது. அதற்கு முதலில் நீங்கள் விரும்பும் டிரெஸ் எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின் ஒரு பாத்திரத்தில்  டிரஸ் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு படுத்த வேண்டும். தண்ணீர் ஓரளவு கொதிக்கும் நிலைக்கு வரும்போது அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை போட வேண்டும். உப்பு கலந்த பின் தண்ணீர் நன்கு கொதிக்கும் சமயத்தில் அதில் உங்கள் வீட்டில் இருக்கும் சாய பொடி சேர்க்க வேண்டும். குறிப்பாக உங்களுடைய துணி எந்த நேரத்தில் இருக்கிறதோ அந்த நிறத்திற்கான சாயப்பொடியை கொதிக்கும் தண்ணீரில் சேர்க்க வேண்டும்.

நீங்கள் சாயப்போடியை தண்ணீரில் சேர்த்த பின் அடுப்பை உடனே அனைத்து விட்டு பொடியை நன்றாக தண்ணீரில் கலக்க வேண்டும். பின்னர் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் துணியை இந்த சூடான நீரில் போட்டு அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து, தண்ணீரில் இருந்து உங்கள் டிரஸ்சை எடுத்து சாதாரண தண்ணீரில் இரண்டு முறை அலச வேண்டும். அதன் பின்னர் அந்த டிரஸ்ஸை உங்கள் வீட்டில் நிழலில் காய வைக்க வேண்டும். அவ்வளவுதான், இப்போது சாயம் போன உங்கள்  பழைய டிரஸ் ஆனது இப்போது புது துணி போல பளிச்சென்று மாறியிருக்கும்.

முக்கிய குறிப்பு: நீங்கள் உங்கள் டிரஸ்சை சாயத் தண்ணீரில் முக்கி எடுத்த பின் மறந்தும் கூட துணியை பிழிய கூடாது. அது போல் துணியை வெயிலில் காய வைக்கவும் கூடாது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Star Fruit Benefits : இந்த ஸ்டார் பழத்தை பாத்தா உடனே வாங்கி சாப்பிடுங்க... கோடி நன்மைகள் கிடைக்கும்
Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!