துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்...!

Published : Apr 11, 2019, 01:41 PM IST
துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்...!

சுருக்கம்

குடும்பத்தில் குழப்பம் நீங்கி மகிழ்ச்சியாக இருக்கும் நாள் இது. உங்களுக்கு தேவையான பண வரவு இருக்கும். புதியவர்கள் நண்பர்களாக பழகுவார்கள். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும் நாள் இது.  

துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்...!

துலாம் ராசி நேயர்களே..!

குடும்பத்தில் குழப்பம் நீங்கி மகிழ்ச்சியாக இருக்கும் நாள் இது. உங்களுக்கு தேவையான பண வரவு இருக்கும். புதியவர்கள் நண்பர்களாக பழகுவார்கள். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும் நாள் இது.

விருச்சிக ராசி நேயர்களே..!

உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக சிந்தித்து முடிவெடுக்கும் நாள் இது. நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்பட்டாலும், சில நாட்களில் முடித்து விடுவீர்கள். அன்பு தொல்லை அதிகமாக இருக்கும். 

தனுசு ராசி நேயர்களே...!

சகோதர வகையில் உங்களுக்கு நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். உறவினர்கள் நண்பர்களால் அனுகூலம் ஏற்படும் நாள் இது.

மகர ராசி நேயர்களே..!

அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும் நாள் இது.

கும்ப ராசி நேயர்களே...!

பொறுப்பு பதவி உங்களை தேடி வரும் நாள் இது. புதிய முயற்சிகள் யாவும் எளிதில் வெற்றி அடையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

மீனராசி நேயர்களே..!

மறுக்கப்பட்ட சில உரிமைகள் உங்களுக்கு கிடைக்கும். கடின உழைப்பால் வெற்றிகளைக் குவிக்கும் நாள் இது. பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். மனைவிவழி உறவினர்களால் உங்களுக்கு எப்போதும் ஆதாயம் உண்டு.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்