துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..!

Published : May 22, 2019, 12:24 PM IST
துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..!

சுருக்கம்

உறவினர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். சுபகாரிய பேச்சு அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் நல்ல விதமாக செல்லும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் மேற்கொள்வீர்கள்.  

துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..!

துலாம் ராசி நேயர்களே..!

உறவினர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். சுபகாரிய பேச்சு அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் நல்ல விதமாக செல்லும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் மேற்கொள்வீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

எண்ணிய காரியம் மிக எளிதில் நிறைவேறும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் உங்களிடம் வந்தடைவர். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்தி உங்களை வந்தடையும்.

தனுசு ராசி நேயர்களே...!

உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும். மிகவும் உற்சாகமாக காணப்படுவீர்கள். ஆன்மீக வழிபாடு உங்களுக்கு பேருதவியாக இருக்கும்.

மகர ராசி நேயர்களே...!

விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள் இது. வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். திடீர் பயணத்தால் ஒரு சில பணிகள் மேற்கொள்ள முடியாமல் போகலாம்.

கும்ப ராசி நேயர்களே...!

உங்களுடைய வாழ்வில் முன்னேற்றம் அதிகரிக்கும். ஆரம்பத்தில் சிறுசிறு சிக்கல்கள் வந்தாலும் முடிவில் நல்லவிதமாக முடியும். உடல்நலத்தில் அக்கறை காண்பிப்பது நல்லது. பேச்சைக் குறைத்து செயலில் அதிக நாட்டம் காட்டுவீர்கள்.

மீன ராசி நேயர்களே...!

அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களுக்கு இன்று வந்து கொண்டே இருக்கும். வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் நாளுக்கு நாள் உயரும். தொலை தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம். வருமானம் போதுமான அளவிற்கு இருக்கும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்