இந்த 2 அறிகுறி இருந்தாலே இதுதானாம்..! பிரிட்டிஷ் டாக்டரின் அதிர்ச்சி தகவல்..!

By ezhil mozhiFirst Published Mar 25, 2020, 2:22 PM IST
Highlights

இந்த ஒரு நிலையில் காய்ச்சல் இருமல், சளி, தலைவலி, போன்றவை மட்டுமே கொரோனா அறிகுறிகள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ஐரோப்பிய டாக்டர் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது
 

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெரும்  பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு முன்னதாக  எத்தனையோ நோய்  இருந்தாலும் அதற்காக பல்வேறு ஆராய்ச்சி செய்து அதற்கான சரியான மருந்தை கண்டு பிடிக்கப்பட்டு சிகிச்சை பெற முடிந்தது

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமலே உலக நாடுகள் திணறி வருகிறது. இந்த ஒரு நிலையில் காய்ச்சல் இருமல், சளி, தலைவலி, போன்றவை மட்டுமே கொரோனா அறிகுறிகள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ஐரோப்பிய டாக்டர் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது

காது-மூக்கு தொண்டை மருத்துவரான இவர், திடீரென வாசனையை உணர முடியாமல் தோன்றினாலோ அல்லது வாசனை அறியும் திறன் இல்லை என்றால் அது கொரோனாவிற்கான அறிகுறி என தெரிவித்து உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நாக்கில் ருசி  உணர முடியாமல் இருந்தாலும் கொரோனாவிற்கான காரணமாக தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை என்றாலும் இதுவரை கொரோனாவிற்கு பாதித்தவர்கள் பெரும்பாலும் 30 சதவீதம் பேருக்கு வாசனையை உணரும் தன்மை இல்லை என்பதுதான் முக்கிய அறிகுறியாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சொல்லப் போனால் இருமல்சளி காய்ச்சல் என்ற எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்து, இந்த 2 அறிகுறி இருந்தாலே கொரோனா இருக்கலாம் என்பதால் இந்த அறிகுறி இருப்பவர்கள் தங்களை தனிமை படுத்திக்கொள்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்

click me!