
வயது வந்த ஆணும் பெண்ணும் காதலில் விழுவது என்பது இயல்பு. அதே காதலுக்காக பெற்றோர்களுக்கு தெரியாமல் பல வருடங்களாக காதலித்து வந்தவர்கள், வீட்டில் எப்படி சம்மதம் வாங்குவது என திட்டம் போடுவார்கள்.
பெண்ணின் பெற்றோர்கள் பொதுவாகவே தன் பெண்ணை நல்ல பையனுக்கு கொடுக்க வேண்டும்.. நல்ல வரன் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என கனவு காண்பார்கள்..
அந்த சமயத்தில் தன் மகள் வேறு ஒருவரை காதலித்து வருகிறாள் என்ற செய்தி தெரிந்து விட்டால்..பெற்றோர்களுக்கு ஒரு விதமான பயமும்... மனக் கவலையும் வந்துவிடும்..
பின்னர் அந்த பையனை சந்திக்க நேரிடும் சமயத்தில், பெண்ணின் பெற்றோரிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்..அப்படி எந்தெந்த வகையில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாமா..?
சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும்..!
உங்களுக்காக காதலியின் பெற்றோர்களை காத்திருக்க வைத்து விடக் கூடாது. நீங்கள் நேரம் தாழ்ந்து சென்றால் உங்கள் மீது அவர்களுக்கு முதல் சந்திப்பே ஒரு விதமான நெகடிவ் வைப்ரேஷன் வந்துவிடும் என்பது தான் உண்மை...
சரியான ஆடை
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள்...அதற்கேற்றார் போல் நல்ல ஆடையை அணிந்து செல்ல வேண்டும்.. நம் உடலுக்கு எது ஏற்றதாக உள்ளதோ அதை அணிவது நல்லது. பார்ப்பதற்கு மிகவும் நீட்டாக இருக்க வேண்டும்
சாப்பிடும் போது....
ஒன்றாக சேர்ந்து உணவு உண்ணும் போது, அவசர அவசரமாக உணவு உண்பது என்பது சரியல்ல..அதற்கு பதிலாக நிதானமாக உண்ண வேண்டும்..அதே போன்று காதலியின் பெற்றோர்கள் உண்ண தொடங்கிய பின் நீங்கள் உண்ணுங்கள்..அதுதான் சரியான முறையும் கூட...
இது உங்கள் மீதான மரியாதையை அதிகரிக்க செய்யும்..அதாவது, மரியாதை தெரிந்த பையனாக தான் இருக்கிறான் நம் மாப்பிள்ளை என்ற எண்ணம் பெண்ணின் பெற்றோர்களுக்கு தோன்றும்..
அதிக உணவு வேண்டாம்...
அதே போன்று, உணவு உண்ணும் போது இது தான்சாக்கு என்று, நிறைய உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கக் கூடாது....
காதலிக்கு அதிக மரியாதை...
காதலியின் பெற்றோர்கள் முன், உங்கள் காதலிக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்..மரியாதையும் அதிகமாக இருக்க வேண்டும்..அப்போது தான்.. மரியாதை தெரிந்த மகனாக இருக்கிறார்..அதுவும் இல்லாமல், தன் மகளை நன்றாக கவனித்து கொள்கிறாரே என்ற எண்ணம் வரும்..அதை விட்டுவிட்டு, அவர்கள் முன் நீ வா போ என பேசி உரிமை கொண்டாடாமல் இருந்தால் சரி.....
இடத்தை காலி செய்யுங்கள்..
காதலியின் பெற்றோர்களிடம் பேசி முடித்த உடன், சரியான சமயத்தில் கிளம்ப பாருங்கள்..அதை விட்டுவிட்டு அங்கேயே கொஞ்சிக்கொள்ள வேண்டாம்....அல்லது அவர்களே உங்களை கேட்கும் அளவிற்கு வைத்துக் கொள்ள கூடாது....யாருடைய நேரத்தையும் வீணடிக்காமல் இருப்பது நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.