மற்ற வகைகளை விட இந்த புற்றுநோய் தான் ஆபத்தானது.. ஏன் தெரியுமா? மருத்துவ நிபுணர் விளக்கம்..

By Ramya s  |  First Published Jul 10, 2023, 7:35 AM IST

சர்கோமா வகை புற்றுநோயானது, மற்ற வகை புற்றுநோய்களிலிருந்து தனித்து நிற்கும் பல குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது


அரிதான ஆனால் கடுமையான புற்றுநோயான சர்கோமா (Sarcoma) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜூலை மாதம் சர்கோமா விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான புற்றுநோய்களைப் போல் இல்லாமல், சர்கோமா உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம். மேலும் சுமார் 70 வகையான சர்கோமாக்கள் உள்ளன. சர்கோமா புற்றுநோயின் சிகிச்சையானது இருப்பிடம், வகை மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.

சர்கோமா எலும்புகள், தசைகள், கொழுப்பு, இரத்த நாளங்கள் மற்றும் தசைநாண்கள் போன்ற உடலின் இணைப்பு திசுக்களில் உருவாகிறது. மற்ற புற்றுநோய்களுடன் ஒப்பிடும்போது சர்கோமா மற்ற உடல் பாகங்களுக்கும் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வலியற்ற கட்டி, எலும்பு வலி, எதிர்பாராத எலும்பு முறிவு, எதிர்பாராத எடை இழப்பு  ஆகியவை சர்கோமாவின் சில அறிகுறிகளாகும். ரசாயனங்கள், வைரஸ்கள், நாள்பட்ட வீக்கம், கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் பிற மரபுவழி நோய்க்குறிகள் ஆகியவை சர்கோமா புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான ஆபத்து காரணிகளாகும். 

Latest Videos

undefined

அதிக எடை கொண்டவர்களுக்கு இறப்பு ஆபத்து அதிகமா? புதிய ஆய்வில் தகவல்

சர்கோமா ஏன் மற்ற வகை புற்றுநோய்களிலிருந்து ஆபத்தானது?

ஃபோர்டிஸ் நினைவு ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை இயக்குநரும், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் விகாஸ் துவா இதுகுறித்து பேசிய போது  "சர்கோமா வகை புற்றுநோயானது, மற்ற வகை புற்றுநோய்களிலிருந்து தனித்து நிற்கும் பல குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது. இது சில சந்தர்ப்பங்களில் மிகவும் ஆபத்தானதாக அமைகிறது. துல்லியமான நோயறிதல், சிகிச்சை திட்டமிடல் மற்றும் நோயாளி பராமரிப்பு ஆகியவற்றிற்கு இந்த வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. சர்கோமாவிற்கும் மற்ற வகை புற்றுநோய்களுக்கும் உள்ள வேறுபாட்டையும் டாக்டர் விகாஸ் துவா விளக்கி உள்ளார்.

சர்கோமா எப்படி உருவாகிறது?

முதலாவதாக, சர்கோமா அதன் தோற்றத்தில் மற்ற புற்றுநோய்களிலிருந்து வேறுபடுகிறது. எலும்புகள், தசைகள், கொழுப்பு, இரத்த நாளங்கள் மற்றும் தசைநாண்கள் போன்ற உடலின் இணைப்பு திசுக்களில் இருந்து சர்கோமாக்கள் உருவாகின்றன. இந்த வேறுபாடு குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இது சர்கோமா நோயாளிகளின் நடத்தை, சிகிச்சை விருப்பங்கள் மற்றும் முன்கணிப்பு ஆகியவற்றை பாதிக்கிறது.

சர்கோமாவின் வகைகள்

சர்கோமாக்கள் பல துணை வகைகளை உள்ளடக்கியது, ஒவ்வொன்றும் தனித்துவமான மருத்துவ நடத்தைகள் மற்றும் சிகிச்சை பதில்களை கொண்டுள்ளன. ஆஸ்டியோசர்கோமா (osteosarcoma) அல்லது எவிங் சர்கோமா (Ewing sarcoma) போன்ற சில சர்கோமாக்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பாதிக்கின்றன, மற்றவை லியோமியோசர்கோமா (leiomyosarcoma) அல்லது லிபோசர்கோமா (liposarcoma) போன்றவை வயதானவர்களுக்கு மிகவும் பொதுவானவை. வயது வித்தியாசத்தில் உள்ள இந்த பன்முகத்தன்மை சர்கோமாக்களின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. பொருத்தமான சிகிச்சை அணுகுமுறைகளை அவசியமாக்குகிறது.

மற்ற புற்றுநோய்களை விட வேகமாக பரவுகிறது

சர்கோமாவை வேறுபடுத்தும் மற்றொரு காரணி, புற்றுநோயின் வளர்ச்சி மற்றும் பரவும் விதிகம் அதிகம். வேறு சில புற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில், சர்கோமா புற்றுநோய் வேகமாக பரவுகிறது. உடலின் ஆதரவு திசுக்களில் அவற்றின் தோற்றம் காரணமாக, இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் அமைப்பு மூலம் மற்ற உடல் பாகங்களுக்கு பரவுகின்றன. 

கண்டறிவது கடினம்

மேலும், சர்கோமாக்கள் பெரும்பாலும் தனிப்பட்ட நோயறிதல் சவால்களை முன்வைக்கின்றன. அவற்றின் அரிதான தன்மை மற்றும் தோற்றத்தில் உள்ள மாறுபாடு நோயறிதலில் தாமதத்தை ஏற்படுத்தும். அல்லது தவறான நோயறிதலுக்கு வழிவகுக்கும், இதன் விளைவாக நோயை கண்டறியும் போதே, புற்றுநோய் அடுத்தடுத்த நிலையை அடைந்திருக்கும். சர்கோமாவை கண்டறிந்து நோயாளிக்கு சிகிச்சையளிப்பதில் சிறப்பு நிபுணத்துவத்தின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சிகிச்சை அளிப்பது சவாலானது

சிகிச்சையைப் பொறுத்தவரை, சர்கோமாவுக்கு பொதுவாக அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவற்றை உள்ளடக்கிய பலதரப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. இருப்பினும், அவற்றின் சிக்கலான தன்மை மற்றும் பாரம்பரிய கீமோதெரபி மருந்துகளுக்கு எதிர்ப்பு காரணமாக, சர்கோமா புற்றுநோய்க்கு திறம்பட சிகிச்சையளிப்பது மிகவும் சவாலானது. இது புதிய சிகிச்சை உத்திகளை ஆராய இலக்கு சிகிச்சைகள், நோயெதிர்ப்பு சிகிச்சைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது அவசியமாகிறது.

மேலும் பேசிய டாக்டர் விகாஸ் துவா "வேறு சில புற்றுநோய் வகைகளுடன் ஒப்பிடும்போது சர்கோமாக்கள் ஒப்பீட்டளவில் அரிதாக இருந்தாலும், அவற்றின் தனித்துவமான குணாதிசயங்கள் சில சமயங்களில் மிகவும் ஆபத்தானதாக மாறுகின்றன. ஆரம்பகால கண்டறிதல், துல்லியமான நோயறிதல் மற்றும் சரியான சிகிச்சை ஆகியவை நோயாளியின் முன்கணிப்பு மற்றும் உயிர்வாழும் விகிதங்களை மேம்படுத்துவதில் முக்கியமானவை. மேலும் சர்கோமாவின் உயிரியலைப் பற்றிய சிறந்த புரிதல் மிகவும் பயனுள்ள சிகிச்சை விருப்பங்களை உருவாக்குவதற்கும், இந்த தனித்துவமான மற்றும் உயிருக்கு ஆபத்தான புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விளைவுகளை மேம்படுத்துவதற்கும் கூடுதல் ஆராய்ச்சிகள் அவசியம்" என்று தெரிவித்தார்.

இளைஞர்களிடையே அதிகரிக்கும் மாரடைப்பு.. இதய நோய்களைத் தடுக்க உதவும் ஆரோக்கியமான டிப்ஸ் இதோ..

click me!