ஆண்கள் இதுபோல நடந்துகொள்கிறார்களா? அவர்கள் தங்கள் துணையை இழக்க பயப்படுகிறார்கள் என்று அர்த்தமாம் - முழு தகவல்!

By Asianet Tamil  |  First Published Oct 5, 2023, 11:57 PM IST

பொதுவாக ஆண்களை உடல் ரீதியாக பலமான ஆட்கள் என்று தான் கூறுவார்கள். ஆனால் மனதளவில் சிறு பிள்ளைகள் ஆகவே இருக்கும் குணம், இன்றளவும் பல ஆண்களிடம் இருக்கின்றது. குறிப்பாக தங்கள் துணையை இழக்க பயப்படும் ஆண்களிடம் சில அறிகுறிகள் தென்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.


பொதுவாக ஆண்கள் பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக இருந்தாலும் அவர்களிடம் பழகி பார்க்கும் பொழுது தான் அவர்களுக்கு உள்ளே இருக்கின்ற அந்த மென்மையான குணம் வெளிப்படும். அந்த வகையில் தன் துணையை இழக்க பயப்படும் ஆண்கள் பின்வருமாறு நடந்து கொள்கிறார்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Tap to resize

Latest Videos

undefined

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

யோசிக்காமல் துணையின் கோரிக்கைகளுக்கு இணங்குவது.

மனிதர்களாகிய நம் அனைவருக்கும் பயத்தை வெளிப்படுத்தும் தன்மை உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக தங்கள் துணையை இழக்க பயப்படும் ஆண்கள் சில சமயங்களில் அதிகமாக பயப்படுகின்றனர். குறிப்பாக அவர்களுடைய துணை ஒரு கோரிக்கையை முன் வைக்கும் பொழுது, அது என்னவாக இருந்தாலும் அதைப்பற்றி சற்றும் யோசிக்காமல், எங்கு நாம் இல்லை என்று சொன்னால் தன்னை விட்டு தன் துணை விலகி விடுவாரோ? என்ற பயத்தில் அவர்கள் கேட்கும் அத்தனை கோரிக்கைகளுக்கும் இணங்குவது ஆண்களின் குணமாக உள்ளது.

உங்கள் தலைசாய்க்க தோள்கொடுக்க தயாராக இருப்பது

சில ஆண்கள் தங்கள் துணையை இழக்க பயப்படுகிறார்கள் என்பதை தாண்டி, அவர்களுக்காக எப்பொழுதும் இருக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தை உடையவர்களாக இருக்கின்றார்கள். குறிப்பாக தங்கள் துணை, மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ சிரமங்களை மேற்கொள்ளும் பொழுது, அவர்கள் தலை சாய்த்துக்கொள்ள ஒரு தோளாக எப்போதும் அவர்கள் காத்திருக்கின்றனர்.

எதையும் தியாகம் செய்யும் குணம்

இயல்பாகவே பெரும்பாலான ஆண்களிடம் இருக்கும் ஒரு குணம் தான் தியாகம். அதிலும் குறிப்பாக தங்கள் மனதிற்கு பிடித்த தங்கள் துணையை இழக்காமல் இருக்க ஆண்கள் எந்தவிதமான தியாகத்தை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பார்கள். ஆகவே இது போன்ற அறிகுறிகள் உங்கள் துணையிடம் தென்பட்டால் அவர் உங்களை இழக்க பயப்படுகிறார் என்று அர்த்தம் என்கிறார்கள் இந்த நிபுணர்கள்.

ஆண்களே ப்ளீஸ் நோட்! உடலுறவின் போது உங்கள் மனைவியிடம் இப்படி நடந்துக்காதீங்க..!!

click me!