கொரோனா : "இயற்கை மருத்துவ ஆயுதத்தை" கையில் எடுத்தார் முதல்வர்...! தொடங்கப்பட்டது "ஆரோக்கியம் திட்டம்"..!

By ezhil mozhiFirst Published Apr 23, 2020, 2:56 PM IST
Highlights

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையின் படி, அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் 11 பேர் அடங்கிய மருத்துவ குழு இந்த பரிந்துரையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. 

கொரோனாவுக்கு எதிரான அதிரடி முடிவு எடுத்த முதல்வர் எடப்பாடி..! 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியம் என்ற சிறப்பு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவங்கி வைத்தார்

கட்டுப்பாடு அதிகம் உள்ள பகுதியான கண்டெய்ன்மெண்டஜோன் பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம் குடும்பம்பங்களுக்கு, நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் மற்றும் சூரண பொட்டலங்களை வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையின் படி, அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் 11 பேர் அடங்கிய மருத்துவ குழு இந்த பரிந்துரையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. அதன் படி, கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக உள்ளவர்களை எளிதில் தாக்குகிறது என்பதால், நோய் எதிர்ப்பு தன்மையை உடலில் அதிகரிக்க மக்களுக்கு இதனை பரிந்துரைக்கலாம் என இந்த குழு தெரிவித்து உள்ளது.

மேலும் இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, சித்தா, யோகா உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தற்போது, நில வேம்பு மற்றும் கபசுர குடிநீர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இது கொரோனாவிற்கு எதிரான மருந்து அல்ல என்றும் கொரோனாவில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள நம் உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க கபசுர குடிநீரை அருந்தலாம் என பரிந்துரை மட்டுமே 
செய்யப்பட்டு உள்ளது

இதற்கு முன்னதாக டெங்கு காய்ச்சல் அதிகரித்து வந்த தருணத்தில், அரசு மருத்துவமனைகளிலேயே நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு நிலையில், எந்த ஒரு வைரஸ் பாதிப்பு இருந்தாலும், இயற்கை மருத்துவம் முறைப்படி நல்ல நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்த நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!