மைக்கேல் ஜாக்சன் பாப் இசையில் புரட்சியை ஏற்படுத்தி 'கிங் ஆஃப் பாப்' ஆனார். ஜாக்சன் தனக்கென ஒரு பாணியைக் கொண்டிருந்தார். அதிலும் அவர் ஒரு கையில் மட்டும் வெள்ளை கையுறை அணிந்திருந்தார். அது அவரது கையெழுத்துப் பாணி என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால், இதன் பின்னணியில் உள்ள உண்மைக் கதை வேறு என்பது தெரியுமா??..
மைக்கேல் ஜாக்சனின் குரல், இசை, நடனம் – சாதாரண இசை வீடியோக்களை சாதாரண மக்களைக் கூட கவரும் படைப்பாற்றலுடன் திரைப்பட அளவு அம்சங்களாக மாற்றும் சிறப்புக் கலையில் தேர்ச்சி பெற்றவர். பாப் நட்சத்திரங்களில், மைக்கேலின் சிகை அலங்காரம், நிறம் மற்றும் ஒரு கையில் அணிந்திருந்த வெள்ளை பளபளப்பான கையுறை அவரது தனித்துவ பாணியாக பார்வையாளர்களின் கண்களைக் கவர்ந்தது.
இதையும் படிங்க: மைக்கேல் ஜாக்சன் போன்று நடனத்தில் அசத்தும் மிசோரம் இளைஞர்; வைரல் வீடியோ!!
மைக்கேல் அணிந்திருந்த வெள்ளைக் கையுறையின் பின்னணியைப் பார்த்தால், 1983ஆம் ஆண்டிலிருந்து வலது கையில் வெள்ளைக் கையுறை அணிந்திருப்பது தெரிகிறது. இதற்கான காரணம் என்ன தெரியுமா?தனக்கிருக்கும் தர்மசங்கடமான உடல்நலப் பிரச்சனையை அனைவரிடமிருந்தும் மறைக்கவே இப்படி செய்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க: பிரான்ஸ் நாட்டின் இளம் பிரதமர்.. விரைவில் பதவியேற்கிறார் ஓரின சேர்க்கையாளர் கேப்ரியல் அட்டல் - முழு விவரம்!
ஜூன் 25, 2009 அன்று மைக்கேலின் மரணத்திற்குப் பிறகு, நடிகை சிசிலி டைசன், கையுறைகளை அணிய மைக்கேலின் முடிவைப் பற்றி பேசினார். "விட்டிலிகோ" என்ற தோல் பிரச்சனையை மறைக்க மைக்கேல் கையுறை அணிந்திருப்பது போல் இருந்தது. மைக்கேலுக்கு வாழ்நாள் முழுவதும் இந்த தோல் பிரச்சனை இருந்தது. மேலும் அவர் முகத்தில் இருக்கும் டோனை மறைக்க மேக்கப் போட்டிருந்தாலும், கையில் இருக்கும் டோனை மறைக்கவே, அவர் கையில் கையுறை அணிந்து ஸ்டைல் ஸ்டேட்மென்ட் செய்ததாக பழைய நினைவை மீட்டெடுத்துள்ளார் சிசிலி.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மைக்கேல் மே மிகவும் கூச்ச சுபாவமுள்ளவராக இருந்தார். இது பொது நிகழ்வுகளில் அவரது நம்பிக்கையை இழப்பதாகத் தோன்றியது. அதனால் தான் அவர் முகத்திற்கு சிகிச்சை எடுப்பதை தவிர மேடையில் மிகவும் அடர்த்தியாக மீட்க செய்து முகத்தில் உள்ள முகப்பருக்கள் தெரியாமல் சருமத்தி நிறத்தை மிருதுவாக்கி கொண்டார் என்றார். அதுமட்டுமின்றி, மைக்கேல் கருப்பாக பிறந்து வெள்ளையாக மாற அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக மக்கள் பலர் கூறுகின்றனர். ஆனால் தோல் பிரச்சனை காரணமாகவே அவரது தோற்றம் மாறிவிட்டது. இருந்தபோதிலும் இதில் எது உண்மை என்று தெரியவில்லை. மைக்கேல் ஜாக்சனின் கதை மறைக்கப்பட்ட புதையலாகவே இருக்கிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.