சென்னையை உலுக்கிய சிறுவனின் இறப்பு.!! மக்களே உஷார்.! விழித்திருங்கள்.. விலகியிருங்கள்.!!

By T BalamurukanFirst Published Jun 16, 2020, 7:53 AM IST
Highlights

சென்னையில் கொரோனா அறிகுறியுடன் தனியார் மருத்துவமனையில் 15 வயது சிறுவன் சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்து வந்தனர். இந்த நிலையில் திடீரென அந்த சிறுவனின் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் மூச்சுத்திணறல் அதிகம் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
 

 சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்த வயது உடையவர்களும் கொரோனாவுக்கு பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறைந்த வயதுடைய சிறுவன் இந்த தொற்றுக்கு பலியாகி இருப்பது சென்னைவாசிகளை மேலும் சோகமடையச்செய்திருக்கிறது.

சென்னையில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. இதைக்கட்டுப்படுத்த தழிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும் பொதுமக்கள் மத்தியில் ஒத்துழைப்பு இல்லாததால் அரசு இயந்திரம் திணறிப்போய் இருக்கிறது. இதனால் நாளுக்குநாள் பலியானவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த மீண்டும் சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் முழுஊரடங்கு 19ம் தேதி முதல் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா அறிகுறியுடன் தனியார் மருத்துவமனையில் 15 வயது சிறுவன் சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்து வந்தனர். இந்த நிலையில் திடீரென அந்த சிறுவனின் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் மூச்சுத்திணறல் அதிகம் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த சிறுவன் தனியார் மருத்துவமனையில் இருந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கீழ்பாக்கம் மருத்துவமனையில் அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு குளுக்கோஸ் மூலமாக உடலுக்கு தேவையான சத்துக்கள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அந்த சிறுவன் இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.மேலும் அந்த 15 வயது சிறுவன் அரியவகை தசை சிதைவு நோயால் ஒரு சில ஆண்டுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அதுமட்டுமின்றி நிமோனியா காய்ச்சல் நுரையீரல் பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவை இருந்ததால் அந்த சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

click me!