கொரோனா சிகிச்சையில் இருந்த இளம் ஜோடி.. குதூலகலப்பட்ட கொரோனா வார்டு.. அதிர்ச்சியில் டாக்டர்கள் நர்ஸ்கள்.!

Published : Jun 11, 2020, 09:01 AM IST
கொரோனா சிகிச்சையில் இருந்த இளம் ஜோடி.. குதூலகலப்பட்ட கொரோனா வார்டு.. அதிர்ச்சியில் டாக்டர்கள் நர்ஸ்கள்.!

சுருக்கம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆண் பெண் நோயாளிகள் இருவருக்கும் காதல் மலர்ந்த தகவல்களை கேள்விட்ட டாக்டர்களுக்கும் நர்ஸ்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.    

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆண் பெண் நோயாளிகள் இருவருக்கும் காதல் மலர்ந்த தகவல்களை கேள்விட்ட டாக்டர்களுக்கும் நர்ஸ்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் கொரோனா வார்டில் பலர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தனர். அந்த வார்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திடீரென காதல் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக பழகிய அவர்கள் இருவரும், தங்கள் குடும்ப கதைகள், சொந்த கதை, சோக கதை ஆகியவற்றை பேசியுள்ளனர். அதன் பின் இருவருக்கும் மனதுக்குப் பிடித்துப் போய் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.


இதனை முதலிலேயே கவனித்த அங்கு பணிபுரியும் நர்சுகள் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சமீபத்தில் திடீரென இந்த காதல் ஜோடி மாயமாகி விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து நர்சுகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை தேடியபோது மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு மறைவான இடத்தில் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை எச்சரித்து நர்ஸ்கள் மற்றும் டாக்டர்கள் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் வரை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அந்த காதல் ஜோடிக்கு அறிவுரை வழங்கினார்கள் டாக்டர்கள்.
கொரோனா சிகிச்சையில் இருந்த இளம்பெண் ஒருவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!