தனது திருமண விழாவில் திருடிய மணமகன்... அதிரடி தண்டனை கொடுத்த மணமகள் வீட்டார்..!

Published : Jan 27, 2020, 06:21 PM IST
தனது திருமண விழாவில் திருடிய மணமகன்...  அதிரடி தண்டனை கொடுத்த மணமகள் வீட்டார்..!

சுருக்கம்

சேலம் மாவட்டம் மேட்டூரில் திருமண விழாவிற்கு வித்தியாசமான பேனர் வைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் திருமண விழாவிற்கு வித்தியாசமான பேனர் வைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். திருமண வாழ்த்துகளிலும், அழைப்பிதழ்களிலும் வித்தியாசம் காட்டி வியக்க வைக்க ரூம் போட்டு யோசிப்பார்கள் போல. அப்படி யோசிப்பதன் பலனாக அந்த வாழ்த்துகள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி விடுகிறது. அப்படியொரு வாழ்த்து பதாகை இது. 

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மாசிலாபாளையம் பகுதியைச் சேர்ந்த ஹெலன் சிந்தியாவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவருக்கும் வருகிற 30-ந் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.


 
இதற்காக மணமகனின் உறவினர்கள் திருமண விழாவிற்காக வித்தியசமான பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அதில் திருமண விழாவிற்கு பதில் வாலிபர் கைது என்றும், குற்றம் பெண்ணின் மனதை திருடியது என்றும், தீர்ப்பு மனதை திருடிய பெண்ணை திருமணம் செய்வது என்றும் இடம் பெற்றிருந்தது.திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியசமான பேனர் இதை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் நின்று ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்