வாட்ஸ் அப்பில் வந்துவிட்டது "சூப்பர் அப்டேட்"..! இனி பயனர்களுக்கு செம்ம ஜாலிதான்..!

By ezhil mozhiFirst Published Jan 26, 2020, 5:31 PM IST
Highlights

வாட்ஸ் அப் செயலியில் டார்க் மோட் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் இந்த வசதி கிடைக்கும். 

வாட்ஸ் அப்பில் வந்துவிட்டது "சூப்பர் அப்டேட்"..! இனி பயனர்களுக்கு செம்ம ஜாலிதான்..! 

ஸ்மார்ட்போன், உலகத்தையே உள்ளங்கையில் அடக்கிவிட்டது என்றால், உரையாடல்களை விரல் நுனியில் சுருக்கிவிட்டது வாட்ஸ் அப். இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் பல்வேறு புதிய அப்டேட்ஸ்களை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. 

வாட்ஸ் அப் செயலியில் டார்க் மோட் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் இந்த வசதி கிடைக்கும். இரவு நேரத்தில் வாட்ஸ் அப்பில் அரட்டையடிக்கும்போது போன் திரையிலிருந்து வரும் வெளிச்சம் கண்களை உறுத்தக்கூடிய அளவு பிரகாசமாக இருப்பதால், 'டார்க் மோட்' பயனர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கொண்டு வரப்பட்டுள்ளது.   

டார்க் மோடில் Interface ஒளிகுறைந்த நிலையில் கறுப்பாக இருக்கும். திரையின் வெளிச்சம் கண்களுக்கு கூச்சத்தை தராது. இதற்கான முயற்சியில் வாட்ஸ் அப் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. 

யூடியூப், ட்விட்டர், கூகுள் மேப் உள்ளிட்ட பல செயலிகளில் ஏற்கனவே 'டார்க் மோட்' பயன்பாட்டில் உள்ளது. வாட்ஸ் அப்பில் வரவுள்ள டார்க் மோடை, பயனாளர்கள் தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் நாமே மாற்றிக் கொள்ளலாம். தானியங்கு விதத்திலும் குறித்த நேரத்துக்கு டார்ப் மோடுக்கு மாறிக்கொள்ளும்படியான வசதியையும் வாட்ஸ் அப் நிறுவனம் தந்துள்ளது. 

வாட்ஸ்அப்பில் டார்க் மோட் எப்படி இயங்குகிறது?

பீட்டா பயனராக இருந்திருந்தால் மட்டுமே இப்போதைக்கு இந்த பயன்முறையை நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் செயலியில் பெற முடியும். இதைப் பெற விரும்பினால், Google Play Store இல் இருந்து செயலியின் அப்டேட்ஸ் பகுதியைப் பாருங்கள்.

ஆன்ட்ராய்டு பயனராக இருந்தும், இதை முயற்சிக்க காத்திருக்க முடியாவிட்டால், நீங்கள் பீட்டா சோதனையாளராக பதிவு செய்துகொண்டு இதை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். முதலில்  புதுப்பிக்கப்பட்டதும், பயன்பாட்டைத் திறந்து வாட்ஸ்அப் அமைப்புகளுக்குச் (செட்டிங்ஸ்) செல்லவும். அமைப்புகளின் கீழ் அரட்டைக்குச் (Chat) செல்லுங்கள். உங்கள் விருப்பத்தைப் பொறுத்து இருண்ட அல்லது ஒளி கருப்பொருளைத் (Dark or Light theme) தேர்ந்தெடுக்கக்கூடிய ‘தீம்’ (theme) என பெயரிடப்பட்ட புதிய விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள். சாதனத்தின் கருப்பொருளைப் பொறுத்து கருப்பொருளை மாற்றும் ‘கணினி விருப்பம்’ (System Preference) என பெயரிடப்பட்ட மூன்றாவது விருப்பம் இருந்தாலும் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் தேர்வு செய்து கொள்ளலாம்.

சமீபத்திய ஆண்ட்ராய்டு வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷன் 2.20.14 அப்டேட்டின் படி,  டார்க் மோட்  தீம் சோதனையை தொடர்ந்து, புதியதாக மூன்று  மாற்றங்களுக்கான சோதனைகள் அடுத்தடுத்து  வெளியாகவுள்ளன.

அனிமேஷன் ஸ்டிக்கர், டெலிட் மெசேஜஸ் மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கான ஐ-க்லவுட் கீ-செயின் போன்ற 3 அம்சங்கள், பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

1. வாட்ஸ் அப் அனிமேஷன் ஸ்டிக்கர்

வாட்ஸ் அப்பில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அனிமேஷன் ஸ்டிக்கர் அம்சம் ஒரு சிறிய பிளே ஐகான் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஐகான் அனிமேஷன் செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத ஸ்டிக்கர்களுக்கு இடையிலான வேறுபாட்டை வெளிப்படுத்துகிறது. இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு இருந்தாலும் சமீபத்திய பீட்டாவில் உங்களால் இந்த அம்சத்தைப் பார்க்க முடியாது. இது பயன்பாட்டிற்கு வரும்போது, அனிமேஷன் ஆப்ஷனை தேர்வு செய்ததும், அனிமேஷன்  மாதிரி பட்டியல்  அருகாமையிலேயே தோன்றி விடும்.

2. வாட்ஸ்அப் டெலிட் மெசேஜஸ் அம்சம்

வாட்ஸ் அப்பில் சோதனை செய்யப்பட்டு வரும் அடுத்த முக்கிய மாற்றம் டெலிட் மெசேஜஸ் அம்சம். தற்பொழுது சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சத்தின்படி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு சாட்டில் உள்ள குருந்தகவல்கள் தானாகவே அழியும் படி உருவாக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் 2.20.14 வெர்ஷனில் இதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போன்று அப்டேட் செய்யும்போது பேக்அப் எடுக்காமல் குறுந்தகவல்கள் டெலிட் ஆகிவிட்டால், அவற்றை ஐ-கிளவுடில் இருந்து டவுன்லோட் செய்யும் புதிய வசதிகளும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

3. வாட்ஸ்அப் அக்கவுண்ட் டிரான்ஸ்பர்

இறுதியாக வாட்ஸ் அப் அக்கவுண்ட் டிரான்ஸ்பர் என்ற புதிய அம்சத்திற்கான  சோதனையம் நடந்து வருகிறது. இதன்படி ஆன்ட்ராய்டு பயனர்கள் தற்போது தங்களின் புதிய ஸ்மார்ட்போனில் எந்த ஒரு சான்றுமில்லாமல், எளிதாக தங்களின் வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை உடனடியாக அவர்களின் புதிய போனிற்கு மாற்றம் செய்ய முடிகிறது. விரைவில் இந்த அம்சம் ஐபோன் பயனர்களுக்கு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய சிறப்பம்சங்களின் பரிசோதனை வெற்றிகரமாக முடிவடையும் பட்சத்தில், விரைவாக அனைத்து பயனாளர்களுக்கும் அந்த வசதிகள் கிடைக்கும்.

click me!