பிரதமர் மோடிக்கு கோவில்..! அரசியலை தாண்டி "மோடி ஒரு நல்ல மனிதர்"..! பாஜக-வினரையே மெர்சலாக்கிய விவசாயி..!

Published : Dec 25, 2019, 03:20 PM IST
பிரதமர் மோடிக்கு கோவில்..! அரசியலை தாண்டி "மோடி ஒரு நல்ல மனிதர்"..! பாஜக-வினரையே மெர்சலாக்கிய விவசாயி..!

சுருக்கம்

எரக்குடியில் உள்ள அவருடைய விவசாய தோட்டத்தில் மோடியின் கோவிலுக்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி வருகிறார். விவசாய சங்க தலைவராகவும் இருந்து வரும் சங்கர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர தொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது

பிரதமர் மோடிக்கு கோவில்..! அரசியலை தாண்டி "மோடி ஒரு நல்ல மனிதர்"..! பாஜகவினரையே மெர்சலாக்கிய விவசாயி..! 

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிக்கு அருகே உள்ள எரக்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் பிரதமர் நரேந்திர மோடியின் மீது கொண்டுள்ள பற்று காரணமாக அவருடைய சொந்த செலவில் மோடி சிலை வைத்து கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார் 

அதன்படி எரக்குடியில் உள்ள அவருடைய விவசாய தோட்டத்தில் மோடியின் கோவிலுக்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி வருகிறார். விவசாய சங்க தலைவராகவும் இருந்து வரும் சங்கர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர தொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து ஷங்கர் தெரிவிக்கும்போது, "கடந்த எட்டு மாதங்களாக இந்த கோவிலை கட்டி வருகிறேன். இந்த கோவிலை திறப்பதற்கு கட்சியின் பல மூத்த தலைவர்களை அழைத்து திறக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை... மேலூர் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய லட்சியம்... கட்சியை  தாண்டி தாண்டி பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர். அவர் மீது கொண்ட பற்று காரணமாக அவருக்கு சிலை அமைத்து வழிபாடு செய்ய விருப்பம் இருந்தது" என தெரிவித்து உள்ளார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Milk storage tips: பால் சீக்கிரம் கெட்டுப்போகுதா? ஃபிரிட்ஜில் இப்படி வைத்தால் ஃபிரெஷ்ஷாக இருக்கும்!
Kanjivaram Saree : காஸ்ட்லியான காஞ்சி பட்டுப் புடவைகளை வருஷக்கணக்கா புதுசு மாதிரி பாதுகாக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!