
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்:
கடந்த 3 ஆண்டுகளாக , ஆசிரியர்களுகான தகுதி தேர்வு நடைப்பெறாமல் இருந்தது.இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
“ டெட்” தேர்வு :
மத்திய அரசின் சட்டப்படி, ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும்.ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 5 சதவீத மதிப்பெண் சலுகை, வெயிட்டேஜ் நியமன முறை ஆகியவை தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதன் காரணமாக,கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரம் 29 மற்றும் 30-ஆம் தேதி:
ஆசிரியர் தகுதித் தேர்வுகள் வரும் ஏப்ரம் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் நடைபெறும் என அமைச்சர் பாண்டியராஜன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
விண்ணப்பம் விநியோகம் :
இந்த தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை ,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் விநியோகிக்கப்படலாம் என எதிர்பார்கப்படுகிறது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.