
பெருத்த எதிர்பார்ப்புகிடையில், நேற்று மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தது .பல துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வருமான வரியில் சலுகை வழங்கியும் , அதே சமயத்தில், அதிக வருமானம் ஈட்டுவோருக்கு , வரி சற்று உயர்த்தியும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த வரி சலுகையால், யாரெல்லாம் பயன்பெறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
குறைவான சம்பளம் வாங்குபவர்கள் :
குறைவாக சம்பாதிப்பவர்களுக்கு லாபம் ஏற்படும் வகையில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2.5 முதல் 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு, ஏற்கனவே வருமான வரி 10% சதவீதமாக இருந்தது. தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருபவர்களுக்கு, பிரச்சனை இல்லை.
5 லட்சத்திற்கு மேல் :
5 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கும் நபர்கள் - ஆண்டுதோறும் வருமான வரியில் 12,500 ரூபாய் லாபம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
5௦ லட்சம் முதல் 1 கோடி வரை :
வருடத்திற்கு 50 லட்சம் முதல் 1 கோடி வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு - 10% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் வரி கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
1 கோடிக்கு மேல் :
இதேபோன்று, 1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 15% கூடுதல் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது என்பது குறிபிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.