துணை வட்டாட்சியரானார் நடுநிலை ஆசிரியர்..! குரூப் -1 தேர்வில் திறமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி..! குவியும் பாராட்டு..!

Published : Feb 21, 2019, 05:57 PM IST
துணை வட்டாட்சியரானார் நடுநிலை ஆசிரியர்..! குரூப் -1 தேர்வில் திறமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி..! குவியும் பாராட்டு..!

சுருக்கம்

சாதிக்க வயது இல்லை என்பதை நிரூபணம் செய்யும் விதமாக தற்போது பள்ளி ஆசிரியர் ஒருவர் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை வட்டாட்சியராக உயர்ந்துள்ளார் என்றால் அவருடைய திறமையை  பாராட்டாமல் இருக்க முடியுமா..?

துணை வட்டாட்சியரானார் நடுநிலை ஆசிரியர்..! 

சாதிக்க வயது இல்லை என்பதை நிரூபணம் செய்யும் விதமாக தற்போது பள்ளி ஆசிரியர் ஒருவர் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை வட்டாட்சியராக உயர்ந்துள்ளார் என்றால் அவருடைய திறமையை பாராட்டாமல் இருக்க முடியுமா..?

கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் சுக்காலியூர் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திருமதி.நிறைமதி. இவர் அங்குள்ள அரசு நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அரசு தேர்வு  எழுதி அதன் மூலம் நல்ல பதவியில் அமர வேண்டும் என முக்கிய நோக்கமாக கொண்டு அதன்படியே அயராது உழைத்து இன்று சாதனை பெண்மணியாக நிற்கிறார் நிறைமதி 

கடந்த முறை நடைபெற்ற குரூப்-1  தேர்வு எழுதி வெற்றி பெற்று, சென்னையில் நேற்று நடைபெற்ற கலந்தாய்வில், துணை ஆட்சியர் பணியை தேர்வு செய்து அதற்கான ஆணையை பெற்றார் என்பது  குறிப்பிடத்தக்கது. சாதாரண ஆசிரியராக இருந்து, தற்போது துணை ஆட்சியராக உயர்வு பெற்றுள்ள நிறைமதிக்கு மக்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Natural Wall Cooling: வெயிலில் இருந்து வீட்டை பாதுகாக்கும் இயற்கை ஏசி ! சுவர்களை குளிர்ச்சியாக்கும் 5 சூப்பர் பூங்கொடிகள்!
Gen-Z பெண்களுக்கான கலர்ஃபுல் புடவை ஸ்டைல்கள்: மாடர்ன் எத்னிக் வேர்!