"இந்த வார்த்தை" சொன்னால் லெக் பீஸ் விலையில் தள்ளுபடி..! உணவு கடை உரிமையாளர் அதிரடி..!

By ezhil mozhiFirst Published Feb 21, 2019, 3:10 PM IST
Highlights

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஜெக்தல்பூரில் இயங்கி வரும் ஒரு உணவு கடையில் பாகிஸ்தான் ஒழிக என்று கூறினால் லெக் பீஸில் ரூபாய் 10 தள்ளுபடி செய்யப்படும் என வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

"இந்த வார்த்தை" சொன்னால் லெக் பீஸில் தள்ளுபடி..!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஜெக்தல்பூரில் இயங்கி வரும் ஒரு உணவு கடையில் பாகிஸ்தான் ஒழிக என்று கூறினால் லெக் பீஸில் ரூபாய் 10 தள்ளுபடி செய்யப்படும் என வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த 14ம் தேதி காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் பலியாயினர் இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் கண்டன குரல் எழுந்தது உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க பல்வேறு நிறுவனங்களும் அரசும் மக்களும் ஆதரவு தெரிவித்தனர்.

அந்த வகையில் டெல்லியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை வீரர்களின் குடும்பங்களுக்கு அளிப்பதாக அறிவித்தனர். அதேபோன்று கோவாவில் வாழும் காஷ்மீரிகள் தங்களின் கடைகளை ஒருநாள் முழுவதும் அடைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் சத்தீஷ்கர் மாநிலத்தில் இயங்கி வரும் இந்த உணவு கடையில் பாகிஸ்தான் ஒழிக என்று கூறுபவர்களுக்கு சிக்கன் லெக்பீஸ் ரூபாய் 10 தள்ளுபடி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கும் போது மனிதநேயத்தை பாகிஸ்தான் என்றுமே மதிப்பதில்லை... இனி வருங்காலத்திலும் மதிக்கப்போவதில்லை எனவே அனைவரின் மனதில் இருந்தும் பாகிஸ்தானை தூக்கி எறிய வேண்டும் என கருதி இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

click me!