நினைத்து நினைத்து சிரிக்கும் "தமிழிசை" ..! பதவி ஏற்பதற்குள் இப்படி ஒரு நிகழ்வா..?

By ezhil mozhiFirst Published Sep 7, 2019, 3:42 PM IST
Highlights

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் அவர்களுடைய கிரியேஷன் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே... 

நினைத்து நினைத்து சிரிக்கும் "தமிழிசை" ..! பதவி ஏற்பதற்குள் இப்படி ஒரு நிகழ்வா..? 

செப்டம்பர் 8 ஆம் தேதியான நாளை தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்க உள்ளார்.

இதற்கு முன்னதாக தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநர் நியமனம் அறிவிப்பு வெளியான அதே நாளில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பல்வேறு ஊடகங்களுக்கு சிறப்பு பேட்டியை கொடுத்த தமிழிசை
சுவாரசியமான பல தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

அப்போது "அரசியலில் இருந்தது ஒரு பருவம் இப்போது அதிகாரப் பதவியில் செல்வது ஒரு தருணம்... இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நான் அரசியலிலிருந்து ஒதுக்கப்படவில்லை.. ஒதுங்கவும் இல்லை.. என்னால் பல்வேறு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் தான் எனக்கு இப்படி ஒரு பதவியை கொடுத்து இருக்கிறார்கள்.. அப்படி இருக்கும்போது எப்படி என்னை அரசியலில் இருந்து ஒதுக்கி விட்டதாக சொல்ல முடியும்.

தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்பதால் தெலுங்கானா இனி மலரும். தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தி இருக்கிறோம். என்னை பற்றி பல மீம்ஸ் இன்றுவரை வெளியாகி வந்தாலும் என்னால் மறக்க முடியாத மீம்ஸ் என்றால், தமிழிசை தெலுங்கானா செல்வதால் 7000 மீம்ஸ் கிரியேட்டர்கள் வேலை இழக்கப் போகிறார்கள் என்பதே..

இதை நினைத்து அன்று நாள் முழுவதும் அவ்வப்போது நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டே இருந்தேன். மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் அவர்களுடைய கிரியேஷன் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே... பத்து நாட்களில் தெலுங்கு கற்றுக் கொள்வது எப்படி என்பது பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கி வைத்து விட்டேன். விரைவாக கற்றுக் கொள்வேன். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளராக இருந்தபோது என்னை சுற்றி தெலுங்கு பேசுபவர்கள் அதிகம்.. எனவே என்னால் அப்போதே தெலுங்கு புரிந்து கொள்ள முடியும்.

ஒரு சில வார்த்தைகள் மட்டும் தெலுங்கில் எனக்கு இப்போது தெரியும். உதாரணத்திற்கு "சுபகாஞ்சலு" என்றால் வாழ்த்துக்கள் என அர்த்தம் இது போன்ற சில பல வார்த்தைகளை கற்று வைத்துள்ளேன்...என தெரிவித்து உள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

click me!